For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கிராண்ட் செஸ் டூர் : உலகின் நம்பர் 1 வீரரை காலி செய்த பிரக்ஞானந்தா.. ஆடிப்போன மேக்னஸ் கார்ல்சன்!

போலாந்து : போலாந்தில் நடைபெற்று வரும் கிராண்ட் செஸ் டூர் தொடரில் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி தமிழக வீரர் பிரக்ஞானந்தா வீழ்த்தி அசத்தியுள்ளார்.

அண்மை காலங்களில் இந்திய செஸ் விளையாட்டின் முகமாக மாறி வருகிறார் தமிழ்நாட்டின் பிரக்ஞானந்தா. கடந்த ஆண்டு நடைபெற்ற செஸ் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சனிடம் தோல்வியை தழுவினாலும், பிரக்ஞானந்தாவை ரசிகர்கள் கவனிக்க தொடங்கினர். தமிழ்நாடு வந்த அவருக்கு ரசிகர்களால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Tamilnadu Player Praggnanandhaa defeats Magnus Carlsen at the Poland Grand Chess Tour

இந்த நிலையில் போலாந்து நாட்டில் 9வது கிராண்ட் செஸ் டூர் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த செஸ் தொடரில் நட்சத்திர வீரர்களான பிரக்ஞானந்தா, மேக்னஸ் கார்லன், குகேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் ஏழாவது சுற்றில் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை எதிர்த்து பிரக்ஞானந்தா விளையாடினார். இந்த ஆட்டம் 49வது நகர்த்தலில் டிராவில் முடிந்தது.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மீண்டும் மேக்னஸ் கார்ல்சனை எதிர்த்து பிரக்ஞானந்தா களமிறங்கினார். இதில் மேக்னஸ் கார்ல்சனை எளிதாக வீழ்த்தி பிரக்ஞானந்தா அசத்தினார். இதன் மூலமாக பிரக்ஞானந்தா புள்ளிப்பட்டியலில் 14.5 புள்ளிகளுடன் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

முதலிடத்தில் 20.5 புள்ளிகளுடன் சீனாவின் வெய் இ முதலிடத்திலும், மேக்ன்ஸ் கார்ல்சன் 18 புள்ளிகளுடன் 2வது இடத்திலும் உள்ளனர். அதேபோல் இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி 14 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளனர். நாளை கடைசி நாள் ஆட்டம் நடக்கவுள்ளதால், ரசிகர்களிடையே யார் வெற்றிபெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Story first published: Sunday, May 12, 2024, 0:02 [IST]
Other articles published on May 12, 2024
English summary
Tamilnadu Player Praggnanandhaa defeats Magnus Carlsen at the Poland Grand Chess Tour
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+