Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய தஞ்சாவூர் வீரர் கார்த்திகேயன் முரளி.. எப்படி வீழ்த்தினார்? வெளியான தகவல்

சென்னை : தமிழகத்தின் தஞ்சாவூரை சேர்ந்த கார்த்திகேயன் முரளி, உலகின் முதல் நிலை வீரரான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

தற்போது கத்தார் மாஸ்டர்ஸ் போட்டியின் ஏழாவது சுற்றில் கறுப்புக் காய்களுடன் விளையாடிய இந்திய வீரர் கார்த்திகேயன் முரளி கார்ல்சனை வீழ்த்தினார். அவருக்கு 24 வயதுதான் ஆகிறது.

Tamilnadus Karthikeyan Murali defeat Magnus Carlsen, third Indian to achieve this feat

7 வது சுற்று போட்டியில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் - இந்திய வீரர் கார்த்திகேயன் முரளி மோதினர். இதில் கார்த்திகேயன் கருப்பு காய்களுடன் ஆடினார். துவக்கம் முதலே அபாரமாக ஆடிய கார்த்திகேயன் முரளி, மேக்னஸ் கார்ல்சன் செய்த சிறிய தவறை சரியாக கண்டுபிடித்தார். அதை சரியாக பயன்படுத்தி கடைசி வரை முன்னிலையில் இருந்து அவர் அபார வெற்றி பெற்றார்.

கார்த்திகேயன் முரளிக்கு முன்னதாக 2005இல் மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியாவின் ஹரிகிருஷ்ணா வெற்றி பெற்று இருந்தார். அதற்கு முன்னதாக விஸ்வநாதன் ஆனந்த் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி இருந்தார். அதுவே முதல் முறையாக உலகின் சிறந்த வீரரான கார்ல்சனை இந்தியர் ஒருவர் முதன்முதலில் வீழ்த்திய நிகழ்வு.

Tamilnadus Karthikeyan Murali defeat Magnus Carlsen, third Indian to achieve this feat

தற்போது கார்த்திகேயன் முரளி மூன்றாவதாக மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி இருக்கிறார். இந்த வெற்றியின் மூலம், கத்தார் மாஸ்டர்ஸ் தொடரில் முரளி 7க்கு 5.5 மதிப்பெண்களை பெற்றுள்ளார். இன்னும் இரண்டு சுற்றுகள் மீதமுள்ள நிலையில், முரளி அதில் முன்னிலையில் இருக்கிறார்.

சமீபத்தில் நடந்து முடிந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் பிரக்யானந்தாவை வீழ்த்தி, மேக்னஸ் கார்ல்சன் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இந்திய வீரர் ஒருவரிடம் அவர் மீண்டும் தோல்வி அடைந்து இருக்கிறார்.

Story first published: Thursday, October 19, 2023, 14:07 [IST]
Other articles published on Oct 19, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+