இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஊர் திரும்பினர்
பெங்களூர்: உலகக் கோப்பைப் போட்டியின் முதல் சுற்றோடு ஏறக் கட்டிய இந்திய அணி வீரர்கள் தோல்வி முகத்துடன் நாடு திரும்பியுள்ளனர்.
கேப்டன் ராகுல் டிராவிட், அணில் கும்ப்ளே, ராபின் உத்தப்பா ஆகியோர் இன்று அதிகாலை பெங்களூர் திரும்பினர். அவர்கள் வீடு செல்லும் வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது.
![]() |
மேற்கு இந்தியத் தீவுகளிலிருந்து லண்டன் சென்ற இந்திய வீரர்கள் அங்கு 2 நாட்கள் தங்கியிருந்து விட்டு மும்பை திரும்பினர். அங்கிருந்து அவரவர் ஊர்களுக்குத் திரும்பினர்.
விமான நிலையத்திலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விமான நிலையத்தில் டிராவிடின் மனைவி விஜேதா, உத்தப்பாவின் பெற்றோர் ஆகியோர் வந்திருந்தனர்.
வெவ்வேறு கார்களில் 3 வீரர்களும் அவரவர் வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
![]() |
இதேபோல ஜாகிர்கான், டோணி, யுவராஜ் சிங் உள்ளிட்ட வீரர்களும் இன்று நாடு திரும்பினர்.
வீரேந்திர ஷேவாக், டோணி, ஆகியோர் டெல்லி வந்து சேர்ந்தனர். முனாப் படேல், சச்சின் டெண்டுல்கர், அகர்கர், ஸ்ரீசந்த், ஜாகிர் கான், பயிற்சியாளர் சேப்பல் ஆகியோர் மும்பை வந்து சேர்ந்தனர்
Story first published: Wednesday, December 7, 2011, 17:44 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications

