Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்த தடவை "டீம் பார்முலா"வை மாத்திட்டாங்க பாஸ்!

சென்னை: 2011ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற இந்திய அணிக்கும், தற்போது 2015ல் நடைபெறவுள்ள உலக்க கோப்பைத் தொடருக்கான இந்திய அணிக்கும் இடையே சில வேறுபாடுகளைக் காண முடிகிறது.

அதாவது பேட்ஸ்மேன் -பந்து வீச்சாளர்கள் - ஆல் ரவுண்டர் வரிசையில் நூலிழை மாற்றம் நடந்துள்ளது.

2011ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்த வீரர்கள் இவர்கள்:

2011ல் இவர்கள்

2011ல் இவர்கள்

டோணி, ஷேவாக், கம்பீர், விராத் கோஹ்லி, ரெய்னா, சச்சின், ஆர்.அஸ்வின், பியூஸ் சாவ்லா, ஹர்பஜன் சிங், ஜாகிர் கான், ஆசிஷ் நெஹ்ரா, முனாப் படேல், ஸ்ரீசாந்த், பிரவீன் குமார், யுவராஜ் சிங்.

6 பேட் - 8 பந்து வீச்சு

6 பேட் - 8 பந்து வீச்சு

இதில் டோணி, ஷேவாக், கம்பீர், கோஹ்லி, ரெய்னா, சச்சின் ஆகியோர் பேட்ஸ்மேன்கள். அதாவது 6 பேட்ஸ்மேன். கீப்பர் டோணிதான். பந்து வீச்சாளர்களில் அஸ்வின், பியூஸ், ஹர்பஜன் ஆகிய 3 பேரும் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆவர். வேகப் பந்து வீச்சுக்கு நெஹ்ரா, ஜாகிர்கான், முனாப், ஸ்ரீசாந்த், பிரவீன் குமார் ஆகிய 5 பேர் இடம் பெற்றிருந்தனர். யுவராஜ் சிங்கும், யூசுப் பதானும் ஆல் ரவுண்டர்களாக கணக்கில் இருந்தனர்.

2015ல் இவர்கள்

2015ல் இவர்கள்

2015ம் ஆண்டுக்கான அணியில் ஒரு மாற்றம் தெரிகிறது. அதாவது டோணி, ஷிகர் தவான், ரோஹித் சர்மா, அஜிங்கியா ரஹானே, விராத் கோஹ்லி, சுரேஷ் ரெய்னா, அம்பட்டி ராயுடு ஆகியோர் பேட்ஸ்மேன்களாக உள்ளனர். அதாவது 7 பேட்ஸ்மேன்கள் உள்ளனர். இது கடந்த முறையை விட ஒரு நபர் அதிகமாகும். ராயுடு விக்கெட் கீப்பரும் கூட.

அதே ஸ்பின்!

அதே ஸ்பின்!

சுழற்பந்து வீச்சில் மாற்றம் இல்லை. அதே 3 நபர் எண்ணிக்கைதான். ஜடேஜா, அஸ்வின், அக்ஸர் படேல்.

ஸ்பீடுக்கு 4 பேர்தான்

ஸ்பீடுக்கு 4 பேர்தான்

வேகப் பந்து வீச்சில் நான்கு பேர் மட்டுமே தற்போது இடம் பிடித்துள்ளனர். அதாவது புவனேஸ் குமார், இஷாந்த் சர்மா, முகம்மது சமி, உமேஷ் யாதவ் ஆகியோரே அவர்கள்.

ஒரு ஆல்ரவுண்டர்

ஒரு ஆல்ரவுண்டர்

ஆல் ரவுண்டர் வரிசையில் ஸ்டூவர்ட் பின்னி மட்டுமே.

பார்க்கலாம்...!

பார்க்கலாம்...!

போட்டியிடும் 11 பேர் கொண்ட அணியில் 3 வேகப் பந்து வீச்சாளர்கள், ஸ்பின்னுக்கு 2, மட்டையடிக்கு 6 பேர் என களம் இறக்கப்படுவர்.

பார்க்கலாம் கையில் கிடைத்துள்ள இவர்களை வைத்து டோணி எப்படி பெர்பார்ம் பண்ணப் போகிறார் என்று.

Story first published: Wednesday, January 7, 2015, 6:06 [IST]
Other articles published on Jan 7, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+