Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

காமன்வெல்த் 2026: தேஜாஸ்வின் சங்கர் வரலாற்ற சாதனை.. டெக்கத்லான் பிரிவில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்

கிளாஸ்கோ: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், ஆடவர் டெக்கத்லான் பிரிவில் இந்தியாவின் முதல் பதக்கத்தை வென்று தேஜஸ்வின் சங்கர் வென்று புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளார். கிளாஸ்கோவில் நடைபெற்ற 2026 காமன்வெல்த் போட்டிகளில், வெண்கலப் பதக்கம் வென்று அவர் இந்த வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

முழங்கால் வலியால் அவதிப்பட்டு வந்த போதிலும், தடகளத்தின் மிகவும் கடினமான 10 போட்டிகளைக் கொண்ட இந்த பிரிவில் தேஜஸ்வின் மொத்தம் 7,976 புள்ளிகளைக் குவித்து அசத்தினார்.jumper's knee என்று அழைக்கப்படும் முழங்கால் காயத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும், இரண்டு நாட்களாக நடைபெற்ற இந்த கடினமான போட்டியில் தேஜஸ்வின் அபாரமாக செயல்பட்டார்.

Tejaswin shankar

2022 பர்மிங்காம் காமன்வெல்த் போட்டியில் உயரம் தாண்டுதலில் அவர் வெண்கலம் வென்றிருந்த நிலையில், தற்போதைய பதக்கம் காமன்வெல்த் அரங்கில் அவரது இரண்டாவது பதக்கமாக அமைந்துள்ளது. 27 வயதான டெல்லியைச் சேர்ந்த தேஜஸ்வின், முன்னதாக முழங்கால் காயம் தீவிரமடைந்ததால் ஆடவர் உயரம் தாண்டுதல் போட்டியில் இருந்து பாதியிலேயே வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்.

இதனால் மிகுந்த ஏமாற்றமடைந்த அவர், மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுதார். இருப்பினும், அந்தத் தோல்வியிலிருந்து மிக விரைவாக மீண்டு வந்து டெக்கத்லான் போட்டியில் தனது அசாத்திய மனவலிமையை நிரூபித்தார்.

போட்டியின் முதல் நாளின் முடிவில் கனடாவின் டேமியன் வார்னருக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருந்த தேஜஸ்வின், போட்டி முழுவதும் பதக்க வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டார். ஒன்பதாவது போட்டியான ஈட்டி எறிதலுக்குப் பிறகு மூன்றாவது இடத்திற்கு முன்னேறிய அவர், இறுதிப் போட்டியான 1500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஐந்தாவது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்தார்.

அவர் பெற்ற 7,976 புள்ளிகள், அவரது சொந்த தேசிய சாதனையான 8,057 புள்ளிகளை விட சற்றே குறைவு என்றாலும், இந்தியாவிற்கு வரலாற்றுப் பதக்கத்தைப் பெற்றுத் தர போதுமானதாக இருந்தது. இந்த பிரிவில் கிரெனடாவின் பாரிஸ் ஒலிம்பிக் வெண்கலப் பதக்க வெற்றியாளர் லிண்டன் விக்டர் 8,096 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தையும், கனடாவின் டேமியன் வார்னர் 8,036 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.

தேஜஸ்வின் சங்கரின் விளையாட்டு வரலாற்றில் இந்த வெண்கலப் பதக்கம் மற்றொரு மிக முக்கிய மைல்கல்லாக இணைந்துள்ளது. தேசிய டெக்கத்லான் சாதனையாளரான இவர், 2023 ஹாங்சோ ஆசிய விளையாட்டிலும் வெள்ளிப் பதக்கம் வென்று, ஆசியாவின் முன்னணி தடகள வீரர்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, August 1, 2026, 2:52 [IST]
Other articles published on Aug 1, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+