Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சினிமா ஸ்டார்களின் நட்சத்திர கிரிக்கெட்டில் கோலிவுட்டை வீழ்த்திய டோலிவுட்!

ஹைதராபாத்: நட்சத்திர கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டியில் சென்னை ரைனோஸை வீழ்த்தி, தெலுங்கு வாரியர்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது.

சினிமா கலைஞர்கள் இடையே சிசிஎல் என்ற பெயரில் டி20 போட்டிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. தமிழ் திரை உலக அணியின் பெயர் சென்னை ரைனோஸ். இந்த ஆண்டு சிசிஎல் போட்டியின் 5வது சீசன் நடந்தது.

முன்னணி நடிகர்கள்

முன்னணி நடிகர்கள்

விஷால், ஆர்யா, ஜீவா, பரத், விக்ராந்த், சாந்தனு போன்ற முன்னணி நடிகர்களை கொண்டது சென்னை ரைனோஸ் அணி. நடப்பாண்டு சீசனில், இதில் பங்கேற்க முடியாது என்று விஷால் அறிவித்தாலும், பிற நடிகர்கள் பின்வாங்கவில்லை.

இந்த ஆண்டும் அமர்க்களம்

இந்த ஆண்டும் அமர்க்களம்

வழக்கம்போலவே இந்த ஆண்டும் சென்னை ரைனோஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

பெங்களூரு புல்டோசர்ஸ்

பெங்களூரு புல்டோசர்ஸ்

பரம வைரியான பெங்களூரு புல்டோசர்ஸ் அணியை அரையிறுதியில் ஜஸ்ட் லைக் தட் என்பது போல தோற்கடித்து இறுதி போட்டிக்குள் நுழைந்தது சென்னை அணி.

கோலிவுட் vs டோலிவுட்

கோலிவுட் vs டோலிவுட்

மற்றொருபக்கம், ஆந்திரா-தெலுங்கானாவின் டோலிவுட் வாலாக்களின் தெலுங்கு வாரியர்ஸ் அணியும், இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலக அணிகள் நேற்று பிற்பகல் ஹைதராபாத்தில் மோதின.

எளிதான வெற்றி

எளிதான வெற்றி

முதலில் பேட் செய்த சென்னை அணி 133 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. 11 பந்து எஞ்சிய நிலையில் தெலுங்கு வாரியர்ஸ் அணி, இந்த ஸ்கோரை எட்டி வெற்றி பெற்றது. வெறும் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது தெலுங்கு வாரியர்ஸ் அணி.

Story first published: Friday, January 16, 2026, 19:11 [IST]
Other articles published on Jan 16, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+