Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிறுமியிடம் சில்மிஷம்.. நாட்டிற்காக ஒலிம்பிக்கில் முதல் தங்கம் வாங்கியவருக்கு சிறை

தாய்லாந்து: ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெற்று தங்கப்பதக்கம் வாங்குவது ஒவ்வொரு நாட்டில் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கும் கனவாகும் அதுவும் தெற்காசிய நாடுகளில் இருந்து ஒரு விளையாட்டு வீரர் அப்படி சாதனை செய்தால் அந்த நாட்டில் நட்சத்திர நாயகனாக கொண்டாடப்படுவார்.

அப்படித்தான் தாய்லாந்து நாட்டில் கடந்த 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற அட்லாண்டா ஒலிம்பிக் போட்டியில் சோம்லக் கம்சிங் என்ற நபர் ஃபெதர்வெயிட் குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இதன் மூலம் ஒலிம்பிக்கில் தாய்லாந்து வென்ற முதல் தங்கம் இதுவாகும்.

olympics thailand gold medalist sports news


இந்த சாதனைக்கு பிறகு சோம்லக் தாய்லாந்து நாட்டின் முடி சூடா மன்னனாக திகழ்ந்தார். இந்த சூழலில் வாழ்க்கையில் எவ்வளவு உச்சத்திற்கு சோம்லக் சென்றாரோ, அதேபோல் தனது 52வது வயதில் ஒரு சரிவை கண்டிருக்கிறார். மது மனிதனை மிருகமாக்கும் என்ற சொல்லாடலுக்கு ஏற்ப சோம்லக் மது அருந்துவிட்டு 17 வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த 2023 ஆம் ஆண்டு புகார் எழுந்தது.

இது தொடர்பாக சிறுமி அளித்த புகாரில் போலீசார் விசாரணை நடத்தினர். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்த விசாரணை நடந்தது. அதில் புகார் அளித்த பெண் சோமலக்குடன் இரவு முழுவதும் இருந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து, இது தொடர்பாக விசாரணை நடத்திய கோன் கென் மாகாண நீதிமன்றம் சோம்லக் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததை உறுதிப்படுத்தியது.

இதனை எடுத்து சோம்லக்கிற்கு மூன்று ஆண்டு சிறை தண்டனையும், இந்திய ரூபாய் மதிப்பில் 4 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் அபாரத்தையும் விதித்து அவருக்கு தண்டனை வழங்கியிருக்கிறது. இது தாய்லாந்து நாட்டில் மிகப்பெரிய பரப்பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஒலிம்பிக்கில் தாய்லாந்துக்காக புகழ் சேர்த்த ஒருவரே இப்படி செய்த சம்பவம் அந்நாட்டு ரசிகர்களை சோகம் அடைய வைத்திருக்கிறது. சோம்லாக் வெறும் ஒலிம்பிக் போட்டிக்கு மட்டும் இல்லாமல் ஆசிய போட்டி உள்ளிட்ட பல்வேறு தொடர்களில் தங்கப் பதக்கம் வென்றெடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, January 23, 2025, 17:06 [IST]
Other articles published on Jan 23, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+