Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"எல்லாம் முடிஞ்சு போச்சு"…. ஸ்பெயினைக் காரித் துப்பும் மீடியாக்கள்!

மரகானா: சிலியிடம் தோற்று உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியை விட்டு வெளியேறியுள்ள ஸ்பெயின் அணியை, அந்த நாட்டு பத்திரிக்கைகள் காரித் துப்பி வருகின்றன.

எல்லாம் முடிந்த்து என்று இதற்கு பல செய்தி நிறுவனங்கள் தலைப்பிட்டுள்ளன.

குரூப் போட்டிகளில் அடுத்தடுத்து 2 பெரிய தோல்விகளைச் சந்தித்து விட்ட ஸ்பெயினின் கோப்பைக் கனவு தகர்ந்து போய் விட்டது. இனிமேல் எதுவும் செய்வதற்கில்லை.

இந்த நிலையில் ஸ்பெயின் மீடியாக்கள், ஸ்பெயின் அணியின் செயல்பாடுகளையும், ஆடிய விதத்தையும் விமர்சித்து வருகின்றன.

அதிர்ச்சியில் ரசிகர்கள்

அதிர்ச்சியில் ரசிகர்கள்

ஸ்பெயின் ரசிகர்கள் தங்களது அணி குரூப் அளவிலேயே வெளியேற்றப்பட்ட அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை. பெரும் ஏமாற்றத்துக்குள்ளாகியுள்ளனர்.

தி என்ட்

தி என்ட்

மார்கா என்ற செய்தித் தாள், ஸ்பெயின் சூப்பர் ஸ்டார் ஆண்டிரஸ் இனியஸ்டாவின் புகைப்படத்தைப் போட்டு கீழே தி என்ட் என்று போட்டுள்ளது.

4 வருடத்துக்கு முன்பு ரேஞ்சே வேற

4 வருடத்துக்கு முன்பு ரேஞ்சே வேற

இதே இனியஸ்டாதான் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஸ்பெயின் கோப்பையை வென்றபோது சூப்பர் ஸ்டாராக ஜொலித்தவர். ஸ்பெயின் ரசிகர்களின் சூப்பர் ஹீரோவாகவும் திகழ்ந்தவர் என்பது நினைவிருக்கலாம்.

நெதர்லாந்துக்கு எதிராக

நெதர்லாந்துக்கு எதிராக

முதல் போட்டியில் ஸ்பெயினை 5 கோல்கள் போட்டு புரட்டி எடுத்த அதே நெதர்லாந்து அணியுடன் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் மோதியபோது, எக்ஸ்ட்ரா நேரத்தில் கோல் அடித்து ஸ்பெயினுக்கு கோப்பையைப் பெற்றுத் தந்தவர் இனியஸ்டாதான்.

அடுத்தடுத்து 3 கோப்பைகள்

அடுத்தடுத்து 3 கோப்பைகள்

உலகக் கோப்பைக்கு முன்பாக ஸ்பெயின் அணி, 2008 ஈரோ கோப்பையை வென்றிருந்தது. அடுத்து, 2010ல் உலகக் கோப்பையை வென்றது. பின்னர் 2012 ஈரோ கோப்பையையும் தட்டிச் சென்றது. ஆனால் தற்போது சறுக்கி விழுந்து விட்டது.

இனி அவ்ளோதான்

இனி அவ்ளோதான்

பல ஸ்பெயின் மீடியாக்களும், உலக மீடியாக்களும் ஸ்பெயின் அணி இனி அவ்வளவுதான் என்று எழுதி வருகின்றன.

மோசமான கேஸில்லாஸ்

மோசமான கேஸில்லாஸ்

கேப்டன் கேஸில்லாஸ்தான் தற்போது அனைவரின் வாயிலும் விழுந்து வருகிறார். இந்த உலகக் கோப்பைப போட்டியில் 2 போட்டிகளில் அவர் 7 கோல்களை தடுக்கத் தவறியதால் அவருக்குக் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது.

கடந்த போட்டியில் 2 கோல்கள் மட்டுமே

கடந்த போட்டியில் 2 கோல்கள் மட்டுமே

அதேசமயம், இதே கேஸில்லாஸ்தான் கடந்த உலகக் கோப்பைப் போட்டியில் 2 கோல்களை மட்டுமே தடுக்கத் தவறி ஸ்பெயினுக்கு உதவியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பழசெல்லாம் அவுட்.. புதுசுக்கு வரவேற்பு

பழசெல்லாம் அவுட்.. புதுசுக்கு வரவேற்பு

ஸ்பெயின் அணியில் உள்ள பல ஸ்டார்களின் கால்பந்து காலம் இத்தோடு முடிவடையப் போவதாக கூறப்படுகிறது. இனி பல புதுமுகங்கள், புதிய ஸ்டார்கள் வந்துதான் ஸ்பெயினை காப்பாற்ற வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

Story first published: Thursday, June 19, 2014, 14:21 [IST]
Other articles published on Jun 19, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+