For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆட்டமெல்லாம் சரியா வராது... சேலஞ்ச் எடுத்த வார்னர்... மனைவியிடம் பாடம்

சிட்னி : கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து விளையாட்டு வீரர்கள் தங்களது வீடுகளில் முடங்கியுள்ளனர்.

Recommended Video

Warner and Candice dances for Prabhudeva's 'Chalmaar'

இதையடுத்து பலரும் பல்வேறு விஷயங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். வீட்டிலேயே பயிற்சி செய்யும் வீடியோக்களையும் வீரர்கள் பதிவு செய்து வருகின்றனர்.

கிரிக்கெட் வீரர்களின் ஆட்டங்களை நேரில் பார்க்க முடியாத ரசிகர்கள் இந்த வீடியோக்களை பார்த்து தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டு வருகின்றனர்.

வீடுகளில் முடங்கிய வீரர்கள்

வீடுகளில் முடங்கிய வீரர்கள்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து பல நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் விளையாட்டு வீரர்கள் குறிப்பாக கிரிக்கெட் வீரர்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். அவர்களுக்கு ஒரே ஆதரவு சமூக வலைதளங்கள் மட்டுமே. தாங்கள் வீடுகளில் செய்யும் செயல்பாடுகளை சமூக வலைதளங்கள் மூலம் பகிர்ந்து அதன்மூலம் தங்களது ரசிகர்களை அவர்கள் உற்சாகமூட்டி வருகின்றனர்.

பல்வேறு வீடியோக்கள் பதிவு

பல்வேறு வீடியோக்கள் பதிவு

வீட்டில் முடங்கினாலும் வீட்டில் இருந்தபடியே பல்வேறு செயல்பாடுகளில் கிரிக்கெட் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். வீட்டில் இருந்தபடி தாங்கள் செய்யும் பிட்னஸ் பயிற்சிகள் மற்றும் குடும்பத்தினர் குறித்த அப்டேட்டுகளையும் அவர்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். இதன்மூலம் அவர்களை நேரில் பார்க்க முடியாவிட்டாலும் இத்தகைய வீடியோக்கள் மூலம் பார்த்து ரசிகர்கள் தங்களை ஆசுவாசப்படுத்தி வருகின்றனர்.

டேவிட் வார்னர் பரபர

டேவிட் வார்னர் பரபர

இந்நிலையில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர், கடந்த ஏப்ரல் மாதம் முதலே டிக்டாக் வீடியோக்களை தொடர்ந்து பதிவு செய்து வருகிறார். தன்னுடைய குடும்பத்தினரையும் இதில் இணைத்து வருகிறார். பெரும்பாலும் அவரது டிக் டாக் வீடியோக்களில் இந்தியாவின் பிரபல பாடல்களை எடுத்து செய்து வருகிறார். இதன்மூலம் இந்திய ரசிகர்களை அவர் வெகுவாக கவர்ந்து வருகிறார்.

மனைவியிடம் பாடம்

மனைவியிடம் பாடம்

பாடல்களுக்கு அவர் நடனம் ஆடும்போது, அவருக்கு நடனம் சரியாக வரவில்லை என்ற கமெண்ட்டுகளை அவர் அதிகமாக எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஆனால் அதை அவர் சேலஞ்சாக எடுத்துக் கொண்டு, தன்னுடைய மனைவி கேண்டிசிடம் டான்ஸ் பயிற்சி எடுத்துக் கொண்டு, பிரபு தேவா பாடலுக்கு நடனம் செய்துள்ளார். இருவரில் யாருடைய நடனம் சூப்பராக இருக்கிறது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Story first published: Monday, June 15, 2020, 13:08 [IST]
Other articles published on Jun 15, 2020
English summary
Warner took help from wife Candice to improve his dancing skills
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+