BBC Tamil

யார் இந்த அண்டர்டேக்கர்? அவர் வெளியேறினால் ரசிகர்கள் ஏன் அழுகிறார்கள்?

By Bbc Tamil
அண்டர்டேக்கர்

1990 - ஆம் ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்களுக்கு மல்யுத்தம் என்பது வெறும் விளையாட்டல்ல .

தொலைக்காட்சியின் முன் மணிக்கணக்காக அமர்வது, மல்யுத்த அட்டைகளை சேகரிப்பது, மல்யுத்தம் தொடர்பான விளையாட்டுகளை அதிகம் விரும்புவது - அப்போது கிரிக்கெட்டை விட மல்யுத்தத்தில்தான் அதிக ஆர்வம் இருந்தது.

ஓய்வு பெறுவதாக அறிவித்த அண்டர்டேக்கர்

WWF (பின்னர் WWE ஆக மாற்றப்பட்டது) இன் ஒவ்வொரு போட்டியும் மனதிற்கு மிகவும் நெருக்கமாக இருந்தது. மல்யுத்தத்தில் நடைபெறும் சண்டை உண்மையானது இல்லை, வெறும் பொழுதுபோக்குதான்.

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த மல்யுத்தம்

கேஜ் மேட்ச், லாஸ்ட் மேன் ஸ்டாண்டிங், ஸ்லெட்ஜ் ஹேமர் அல்லது வேறு எதாவது அம்சம் கொண்ட மல்யுத்தப் போட்டி நடக்கும். அதில் ஒவ்வொரு குழந்தையும் ஒரு கதாநாயகனையும், ஒரு வில்லனையும் தேர்ந்தெடுப்பார்கள்.

அப்போது ஒரு மல்யுத்த வீரர் இருந்தார், அவர் தொடர்புடைய அனைத்து விசயங்களும் ரகசியமாக இருந்தது. இருந்த போதிலும், அனைவரும் அவரை விரும்பினார்கள்.

மல்யுத்தப் போட்டியில் வெற்றியாளர்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள். ஆனால் இவர் மீதான பேரார்வம் யாருக்கும் துளியும் குறையவில்லை.

அண்டர்டேக்கரின் சிறப்பு என்ன?

அண்டர்டேக்கர்- இவரின் பெயரே மரணத்தை நினைவுப்படுத்தும். அவர் போட்டி இடத்தை நெருங்கும்போது, அவருக்கான பிரத்யேக அடையாள இசை ஒலிக்கும், அந்த இடத்தில் இருள் சூழும். சவப்பெட்டியில் அவர் வருவார், இது தான் அவரது அறிமுகம்.

2010-ஆம் ஆண்டில் நடந்த ஒரு போட்டியில் அண்டர்டேக்கர்

மற்றொரு மல்யுத்த வீர்ர் அழகிகளுடன் வரும்போது, அண்டர்டேக்கர் சவப்பெட்டியில் இருந்து எழுந்துவருவார். அவர் எதிரியிடம் அடிவாங்கி கீழே விழுந்தால், ரசிகர்களின் இதயமும் கீழே விழுந்துவிடும். திடீரென்று அவர் எழுந்தால், அனைவரும் உற்சாகமாகிவிடுவார்கள்.

குத்துச்சண்டையில் உலகை வியக்க வைக்கும் 9 வயது காஷ்மீர் அழகி'

விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக திங்கட்கிழமையன்று அவர் அறிவித்ததும், ரசிகர்களுக்கு அது மகிழ்ச்சியை அளிக்கவில்லை. ரெசல்மேனியா இருளாக இருந்தாலும், ரசிகர்களின் கண்ணில் இருந்து நீர் வழிவது அங்கிருந்த மங்கலான வெளிச்சத்தில் தெரிந்த்து.

யார் இந்த அண்டர்டேக்கர்?

அண்டர்டேக்கர் என்பதே அவரது பிரபலமான அடையாளமாக இருந்தாலும், மல்யுத்த மேடைக்கு வெளியே, அவருக்கு ஓர் இயற்பெயர் இருக்கிறது. அதைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த WWE மல்யுத்தம்

மார்க் விலியம் கைலவே என்பதுதான் அண்டர்டேக்கரின் உண்மையான பெயர். 1984 ஆம் ஆண்டு கிளாஸ் சேம்பியன்ஷிப் ரெஸ்லிங்கில் விளையாட ஆரம்பித்த அவர், 1989 ஆம் ஆண்டு "மீன் மார்க்" என்ற பெயரில் உலக சாம்பியன்ஷிப் ரெஸ்லிங்கிற்கு அறிமுகமானார். அங்கிருந்து 1990 ஆம் ஆண்டு முதல் உலக மல்யுத்த சம்மேளனத்திற்கு விளையாட ஆரம்பித்தார்.

இந்திய ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்: இந்திய வெற்றி திடமானதா?

27 ஆண்டுகளாக தொடர்ந்த அவரது பயணம் முடிவுக்கு வரும் நேரம் இது. அண்டர்டேக்கருக்கு வழியனுப்புவது குறித்து சமூக ஊடகங்களில் மக்கள் துக்கத்தை வெளிப்படுத்துகிறார்கள். அவர் ஓய்வு பெறுவது எவ்வளவு பெரிய விஷயம்? சிறந்த மல்யுத்த தொழில்முறை ஆட்டக்காரர் என்ற பெயர் வாங்குவது அவ்வளவு எளிதானதா?

த அண்டர்டேக்கரின் கைலவேவின் முழு செயல்பாடுகளும் அச்சத்தை அடிப்படையாக கொண்டிருந்த்து. 2000 வது ஆண்டின் தொடக்கத்தில் அவர் தனது பாணியில் ஓரளவு மாற்றத்தை கொண்டுவந்தார். அவர் பைக்கில் சவாரி செய்து மல்யுத்த மேடைக்கு வரத் தொடங்கினார்.

35 ஆண்டுக்குப் பிறகு பள்ளி நண்பரை குத்துச்சண்டைக்கு அழைத்த பிரதமர்!

ஆனால் 2004 ஆம் ஆண்டு மீண்டும் தனது பழைய பாணிக்கே அவர் மாறினார். WWEவில், அவரது "ஒன்றுவிட்ட சகோதரன்" கேன் மீது கவனம் திரும்பியது.

தொடக்கத்தில் இருவருக்கும் விரோதம் இருந்தது, ஆனால் பிறகு இருவரும் ஒன்றிணைந்தனர். பிறகு "பிரதர்ஸ் ஆஃப் டிஸ்ட்ரக்‌ஷன்" திரைப்படத்தையும் எடுத்தார்கள்.

யார் இந்த அண்டர்டேக்கர்?

அவரின் பங்களிப்பு திரைப்படங்களிலும் இருந்தது. அக்‌ஷய் குமாரின் "கிலாடியோ கா கிலாடி" என்ற திரைப்படத்தில் கதாநாயகனுடன் மோதும் காட்சியில் நடித்திருந்தார்.

மல்யுத்தப் போட்டிகளில் தொடர்ச்சியாக 21 வெற்றிகளை பெற்று ரசிகர்களின் மனதிலும் அண்டர்டேக்கர் இடம்பிடித்திருந்தாலும், அவர் தொழில்முறை ரெஸ்லிங் போட்டிகளில் தான் அதிக அளவிலான ரசிகர்களின் மனதை கவர்ந்தார். மல்யுத்த மேடைகள் அண்டர்டேக்கரை எப்போதும் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும்.

BBC Tamil
Story first published: Wednesday, April 5, 2017, 17:40 [IST]
Other articles published on Apr 5, 2017
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X