Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கொரோனாவாது கிரோனாவாது.. முடிஞ்சா தொட்டுப் பாரு.. உலகமே அலறி ஓடிக்கிட்டு இருக்கு.. இவங்க மட்டும்?

நியூயார்க் : கொரோனா பரவும் அச்சத்தால் உலகமே படிப்படியாக ஸ்தம்பித்து வருகிறது.

Recommended Video

IPL 2020 : Australia players may not play in IPL if it happens

மக்கள் வெளியே வரவே அஞ்சும் நிலை உருவாகிக் கொண்டு இருக்கிறது. உலகம் முழுவதும் பெரும்பாலான விளையாட்டுப் போட்டிகள் நிறுத்தப்பட்டாலும், சில விளையாட்டுத் தொடர்களை ஒன்றுமே செய்ய முடியவில்லை.

"கொரோனாவாது, கிரோனாவாது காமெடி பண்ணாம போங்கய்யா" என அவர்கள் பாட்டுக்கு விளையாட்டை நடத்துவதில் தீவிரமாக இருக்கிறார்கள்.

கிரிக்கெட் தடை

கிரிக்கெட் தடை

கிரிக்கெட் போட்டிகள் உலகம் முழுவதுமே நிறுத்தப்பட்டுள்ளது. சர்வதேச அளவிலும், பல பெரிய உள்ளூர் கிரிக்கெட் தொடர்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஐபிஎல் தொடர் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதே போல, அமேரிக்காவிலும் விளையாட்டுக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் பாதிப்பு

அமெரிக்காவில் பாதிப்பு

கொரோனா பாதிப்பால் அமெரிக்காவில் கூடைப்பந்து, ரக்பி, கால்பந்து, ஹாக்கி, பேஸ்பால் என பல உள்ளூர் விளையாட்டுத் தொடர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஐரோப்பாவிலும் பல கால்பந்து தொடர்கள் அதிரடியாக நிறுத்தப்பட்டுள்ளன.

கொரோனாவுக்கே பெப்பே

கொரோனாவுக்கே பெப்பே

இப்படி பல முக்கிய விளையாட்டுக்களை நிறுத்தினாலும் சில இடங்களில் சில விளையாட்டுக்களை, கொரோனாவால் நிறுத்த முடியவில்லை. மிருகங்களை வைத்து நடக்கும் போட்டிகள், மார்ஷியல் ஆர்ட்ஸ் மல்யுத்தப் போட்டி, டார்ட், ஸ்னூக்கர் என சில விளையாட்டுக்கள் கொரோனாவுக்கே பெப்பே காட்டி வருகிறது. ஆனால், எத்தனை நாளைக்கு என்பது தான் தெரியவில்லை!

நாய் பந்தயம்

அமெரிக்காவின் பனி சூழ்ந்த அலாஸ்கா மாகாணத்தில் பனியில் நாய்களுக்கு இடையே ஆன பந்தயம் இன்னும் நடந்து வருகிறது. மிருகங்களுக்கு கொரோனா அதிகமாக பரவாது என கூறப்படும் நிலையில் அங்கே இந்த பந்தயம் தொடர்ந்து நடந்து வருகிறது.

குதிரைப் பந்தயம்

அதே அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்ட நிலையிலும், குதிரைப் பந்தயம் தொடர்ந்து நடந்து வருகிறது. இங்கிலாந்தில் கடந்த சில நாட்கள் முன்பு வரை ஆயிரக்கணக்கான மக்கள் பார்க்க, குதிரைப் பந்தயம் நடந்து வந்தது. தற்போது அங்கே ரசிகர்கள் இல்லாமல் பந்தயம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்காப்புக் கலை போட்டிகள்

தற்காப்புக் கலை போட்டிகள்

அல்டிமேட் பைட்டிங் சாம்பியன்ஷிப் எனப்படும் கலப்பு தற்காப்புக் கலை போட்டி (மார்ஷியல் ஆர்ட்ஸ்) எந்த வித தடையும் இன்றி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. ரசிகர்கள் இல்லாத அரங்கில் அல்லது தொலைக்காட்சி ஸ்டுடியோவில் இந்த தொடர் நடந்து வருகிறது.

ஸ்னூக்கர் போட்டிகள்

பிரீமியர் லீக் டார்ட்ஸ் எனப்படும் குறி பார்த்து எறியும் போட்டி உள் விளையாட்டு என்பதால் ஐரோப்பாவில் நடந்து வந்தது. அதன் இறுதிச் சுற்று மட்டுமே இப்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதே போல், இங்கிலாந்தில் ஸ்னூக்கர் போட்டிகளும் ரசிகர்கள் இல்லாமல் நடந்து வருகிறது.

கால்பந்து போட்டிகள்

கால்பந்து போட்டிகள்

கால்பந்துக்கு ரசிகர்கள் இல்லை, வெறியர்களே அதிகம் என கூறப்படுவதுண்டு. அது உண்மை என்பது போல, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா தவிர பல நாடுகளில் கால்பந்து போட்டிகள் நடந்து வருகின்றன. தென் அமெரிக்கா, ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, ரஷ்யா, சில ஆசிய நாடுகளில் கால்பந்து நடந்து வருகிறது.

இவர்களை பாதிக்கவில்லை

இவர்களை பாதிக்கவில்லை

கொரோனா வைரஸ் பல இத்தாலி நாட்டு கால்பந்து வீரர்களுக்கு பரவி உள்ளது. அவர்கள் கடந்த மாதத்தில் ரசிகர்கள் இல்லாத அரங்கில் தான் போட்டிகளில் ஆடினர். எனினும், அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, அது பல வீரர்களுக்கும் பரவி உள்ளது. இந்த செய்திகள் எதுவும் மேலே சொன்ன விளையாட்டுப் போட்டிகளை பாதிக்கவில்லை என்பது ஆச்சரியம் தான்.

Story first published: Wednesday, March 18, 2020, 16:04 [IST]
Other articles published on Mar 18, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+