Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நேற்று இந்தியா தோற்றதைப் பார்த்தீர்களே.. இந்த ஹெலன்- கேட் ஜோடியைப் பாத்தீங்களா?

ரியோ டி ஜெனீரோ: ரியோ ஒலிம்பிக் போட்டியில்தான் எத்தனை எத்தனை விசேஷங்கள்.. அதில் ஒன்றுதான் கேட் மற்றும் ஹெலன் ரிச்சர்ட்சன் வால்ஷ் ஜோடி.

இந்த இரு வீராங்கனைகளும் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள். ஹாக்கி வீராங்கனைகள். அதை விட முக்கியமானது.. இவர்கள் இருவரும் ஓரினச்சேர்க்கையாளர்கள். சர்வதேச அளவில் முன்னணி அணியில் இடம் பெற்றுள்ள ஒரே ஓரினச் சேர்க்கை ஜோடி இவர்கள் மட்டுமே.

மேலும் ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக ஓரினச்சேர்க்கை ஜோடி ஒரே அணியில் இடம் பெற்றிருப்பது இதுதான் முதல் முறையாம்.. அதை விட முக்கியமானது, இந்த இருவரும் முறைப்படி திருமணம் செய்து கொண்ட ஜோடி என்பதுதான்.

18 வயது முதல்

18 வயது முதல்

கேட்டும், ஹெலனும் 18 வயதிலிருந்தே நெருங்கிப் பழகி வந்துள்ளனர். இருவரும் ஆரம்பத்தில் நல்ல தோழியாக இருந்தனர். பின்னர் அவர்களுக்குள் புரிதல் அதிகமாகி இருவரும் காதலிக்க ஆரம்பித்தனர்.

திருமண பந்தம்

திருமண பந்தம்

இருவரும் தீவிரமாக காதலிக்க ஆரம்பித்த பின்னர் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். முறைப்படி 2013ம் ஆண்டு இவர்களுக்குத் திருமணமானது.

2008 முதல் ஜோடியாக விளையாடுகிறார்கள்

2008 முதல் ஜோடியாக விளையாடுகிறார்கள்

2008ம் ஆண்டு முதல் இருவரும் ஜோடியாக விளையாடி வருகின்றனர். இருவரும் தம்பதியாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பது இதுதான் முதல் முறையாகும். கேட் அதிக போட்டிகளில் ஆடி பெருமை படைத்தவர்.

எங்களுக்குப் பிடித்துள்ளது

எங்களுக்குப் பிடித்துள்ளது

தங்களது பந்தம் குறித்து இருவரும் கூறுகையில், நாங்கள் யார் என்பது முக்கியமில்லை. எங்களுக்கு இது பிடித்துள்ளது. இருவரும் சந்தோஷமாக இருக்கிறோம். எங்களில் யார் ஆணின் வேலையைச் செய்வது, யார் பெண்ணாக செயல்படுவது என்ற பிரச்சினையே கிடையாது. இருவரும் சமம். இருவருக்கும் சந்தோஷம். அவ்வளவுதான் என்று கூறிச் சிரிக்கிறார்கள்.

இந்திய அணியை வீழ்த்திய ஜோடி

இந்திய அணியை வீழ்த்திய ஜோடி

நேற்று இந்தியாவுடன் நடந்த மோதலில் இங்கிலாந்துதான் ஜெயித்தது. இப்போட்டியில் கேட் - ஹெலன் ஜோடியும் முக்கியப் பங்கு வகித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, August 9, 2016, 13:58 [IST]
Other articles published on Aug 9, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+