உலகத்திலேயே செம பிசியாக எல்லோரும் விளையாடும் ஒரு விளையாட்டு.. இதுதான்!
சென்னை: உலகம் முழுவதும் கொரோனாதான் இப்போது அடித்து ஆடி விளையாடி வருகிறது. அதைத் தாண்டி யாராலும் எதையும் செய்ய முடியாத நிலை. ஆனால் அதையும் தாண்டி ஒரு விளையாட்டை பலரும் இப்போது ஜாலியாக விளையாடிக் கொண்டுள்ளனர்.
கால்பந்து முதல் கைப்பந்து வரை எல்லா விளையாட்டுக்களும் நின்று போய் விட்டன. எந்த விளையாட்டையும் நடத்த முடியாத நிலை. உலகின் பெரும்பலான நாடுகளில் லாக்டவுன் அமலில் உள்ளது. ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் விளையாட்டுப் போட்டிகளை நடத்த முடியாத நிலை.

இந்த நிலையில் நடந்து முடிந்த பழைய போட்டிகளை எடுத்து பலரும் டிவியில் போடுகின்றனர், டிவிட்டரில் பேசுகின்றனர்,, பேஸ்புக்கிலும் சிலாகிக்கின்றனர். ஆனால் சத்தம் போடாமல் ஒரு விளையாட்டு இப்போது பிரபலமாகி வருகிறது. வயது வித்தியாசமே இல்லாமல் பலரும் இதை விளையாடி வருகின்றனர்.
விளையாடி வருகின்றனர் என்றால் நேரில் விளையாட முடியாது.. ஆனாலும் இதை பார்த்து ரசித்து செமையாக பொழுது போக்குகின்றனர். அதேசமயம், வீட்டில் மணல் நிறைய இருந்தால் அதில் இந்த விளையாட்டை விளையாடி பொழுது போக்குகின்றனர். அது என்ன விளையாட்டு என்கிறீர்களா.. இதுதாங்க அது..
இது குட்டி பிளாஸ்டிக் பந்துகளை வைத்து விளையாடும் விளையாட்டு நான்கு அல்லது ஐந்து எத்தனை பேரோ அத்தனை கலர் பால்களை வைத்துக் கொண்டு இதை விளையாடலாம்.. வீட்டில் தேவையானது நல்ல மணல் பரப்பு மட்டுமே..வீட்டு வளாகத்தில் தோட்டம் இருந்தால் இதை விளையாடலாம். செம ஜாலியாக இருக்கிறது பார்க்கவே.. நீங்களும் டிரை பண்ணுங்க. .வீட்டுக்குள்ள இடம் இருந்தால்.. இல்லாட்டி இதைப் பார்த்து பொழுது போக்குங்க.


Click it and Unblock the Notifications