Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகமே பாராட்டிய அண்டர்டேக்கரின் கடைசி மேட்ச்.. WWE வரலாற்றில் முதல்முறை.. மறக்க முடியாத பைக் ரைடு!

நியூயார்க் : WWE ரெஸ்லிங் வீரரான அண்டர்டேக்கர் தன் ஓய்வை அறிவித்துள்ளார்.

சுமார் 30 ஆண்டு காலம் WWE அரங்கில் தன் உடலை வருத்தி, ரசிகர்களை மகிழ்வித்த அவர், தன் 55 வயதில் ஓய்வை அறிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் அவர் பங்கேற்ற ரெஸ்ஸில்மேனியா போட்டியே அவரின் கடைசி போட்டியாக அமைந்தது.

துவம்சம் செய்யும் வீரர்

துவம்சம் செய்யும் வீரர்

அண்டர்டேக்கர் 1990 முதல் WWE போட்டிகளில் பங்கேற்று வந்தார். டெட்மேன் என அழைக்கப்பட்ட அவர் எதிரிகளை இரக்கமே இல்லாமல் துவம்சம் செய்யும் வீரராக காட்டப்பட்டார். கடந்த சில ஆண்டுகளாக அவரது உடல்நிலை அதிக போட்டிகளில் பங்கேற்க ஒத்துழைக்கவில்லை.

தோல்வி

தோல்வி

2014ஆம் ஆண்டு நடந்த ரெஸ்ஸில்மேனியா 30 தொடரில் பிராக்லெஸ்னரிடம் அண்டர்டேக்கர் தோல்வி அடைந்தார். அப்போதே அண்டர்டேக்கர் ஓய்வு பெறப் போவதாக பரபரப்பாக பேசப்பட்டது. அவரது உடல் அப்போதே தளர்ந்து, முதிய தோற்றத்தில் காணப்பட்டது.

மீண்டும் பங்கேற்றார்

மீண்டும் பங்கேற்றார்

அதன் பின்னும் அவர் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்றார். பின்னர் 2017இல் ரோமன் ரெய்ன்ஸ்-இடம் தோல்வி அடைந்தார். அப்போதும் ஓய்வு பற்றி பேசப்பட்டது. எனினும், மூன்று ஆண்டுகள் போட்டிகளில் பங்கேற்றார். கடந்த ஏப்ரல் மாதம் ரெஸ்ஸில்மேனியா 36 தொடரில் தன் கடைசி போட்டியில் பங்கேற்றார்.

போனியார்டு மேட்ச்

போனியார்டு மேட்ச்

அவரது கடைசி போட்டி இதுவரை WWE-இல் யாருமே பார்த்திராத ஒரு போட்டியாக இருந்தது. "போனியார்டு மேட்ச்" (Boneyard match) என்ற அந்தப் போட்டி WWE அரங்கிற்குள், ரிங்கில் நடத்தப்படவில்லை. மாறாக வெளியில் சுடுகாடு போன்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு அதில் நடத்தப்பட்டது.

சண்டைக் காட்சி

சண்டைக் காட்சி

சிறந்த ரெஸ்லிங் வீரரான ஏஜே ஸ்டைல்ஸ் உடன் நடந்த அந்தப் போட்டி சினிமாவில் வரும் சண்டைக் காட்சி போலவே படம் பிடிக்கப்பட்டது. போட்டியின் முடிவில் அண்டர்டேக்கர், ஸ்டைல்ஸ்-ஐ மண்ணோடு, மண்ணாக புதைத்தார்.

கடைசிப் பயணம்

கடைசிப் பயணம்

அதன் பின் தன் புல்லட்டை எடுத்துக் கொண்டு செல்லும் காட்சி காட்டப்பட்டது. அதுவே அண்டர்டேக்கரின் கடைசிப் பயணம் என கூறப்பட்டது. தற்போது அண்டர்டேக்கர் ஓய்வை அறிவித்து அதை உண்மை ஆக்கி இருக்கிறார்.

கௌரவம்

கௌரவம்

அண்டர்டேக்கர் ஓய்வை அறிவித்த நிலையில், ஏஜே ஸ்டைல்ஸ், அவரின் கடைசிப் போட்டியில் ஆடிய கௌரவம் தனக்கு கிடைத்து இருப்பதாக கூறி உள்ளார். ரசிகர்களும் அந்த போட்டியை நினைவு கூர்ந்து இருக்கிறார்கள். 30 ஆண்டு கால ரெஸ்லிங் பயணம் ஒரு சிறந்த போட்டியுடன் முடிவடைந்துள்ளது.

Story first published: Monday, June 22, 2020, 15:55 [IST]
Other articles published on Jun 22, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+