மும்பை: சீனியர் தேசிய பாட்மின்டன் போட்டியின் அரை இறுதிக்கு, பி.வி. சிந்து, சாய்னா நெஹ்வால், கிடாம்பி ஸ்ரீகாந்த் முன்னேறினர்.
82வது சீனியர் தேசிய பாட்மின்டன் போட்டிகள் மும்பையில் நடந்து வருகின்றன. இதன் அரை இறுதிக்கு உலகத் தரவரிசையில் முன்னிலையில் உள்ள பி.வி.சிந்து, சாய்னா நெஹ்வால், கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் முன்னேறினர்.
