செக்ஸ் லீலைக்குப் பின் மீண்டும் கோல்புக்குத் திரும்புகிறார் உட்ஸ்

இதில் வேடிக்கை என்னவென்றால், செக்ஸ் லீலை காரணமாக அவரை பிராண்ட் அம்பாசடர் பொறுப்பிலிருந்து தூக்கிய அக்சென்ச்சர் நிறுவனத்திற்காக அவர் விளையாடப் போகிறார் என்பதுதான்.
செக்ஸ் லீலையின் தாக்கத்திலிருந்து மெதுவாக விடுபட்டு வரும் டைகர் உட்ஸ், அடுத்த வாரம் அரிசோனாவில் நடைபெறவுள்ள அக்சென்ச்சர் கோல்ப் சாம்பியன் போட்டியில் பங்கேற்கிறார். பிப்ரவரி 17 முதல் 21 வரை இப்போட்டிகள் நடைபெறுகின்றன.
இருப்பினும் டைகர் உட்ஸ் இப்போட்டியில் பங்கேற்பது குறித்து பிஜிஏ டூர் உறுதிப்படுத்தவலில்லை.
கடந்த 2 வாரங்களாக மிசிசிப்பியில் உள்ள செக்ஸ் மறுவாழ்வு மையத்தி்ல் தீவிர செக்ஸ் தெரப்பிக்குடுத்தப்பட்டிருந்தார் உட்ஸ். இந்த முகாமின்போது அவருடைய மனைவி எலின் நார்டெக்ரனும் பங்கேற்றதாக கூறப்படுகிறது.
தற்போது எலின் தனது இரு குழந்தைகளுடன் ஐரோப்பாவுக்குப் போய் விட்டார்.
இந்த சிக்கலான நிலையிலிருந்து உட்ஸ் மீளும் முயற்சியாகவே மீண்டும் கோல்ப் போட்டிக்குத் திரும்புவதாக கூறப்படுகிறது.
கோல்ப் மட்டும் விளையாடினால் நல்லதுதான்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:35 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications