Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரே ஒரு காட்சிப் போட்டியில் விளையாட ரூ. 15 கோடி சம்பளம் வாங்கிய டைகர் உட்ஸ்

டெல்லி: டெல்லிக்கு வந்து ஒரு கண்காட்சி கோல்ப் போட்டியில் விளையாடிய டைகர் உட்ஸ், இதற்காக ரூ 15 கோடி பணம் பெற்றார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

டெல்லி வந்த டைகர் உட்ஸ் அங்குள்ள கோல்ப் கிளப்பில் நேற்று முக்கியஸ்தர்களுடன் 18 ஹோல் கண்காட்சி கோல்ப் போட்டியில் விளையாடினார். அவருடன் பல விவிஐபிக்கள் மோதினர்.

உட்ஸின் நிபுணத்துவத்தை இந்தப் போட்டியின்போது பலரும் நேரில் பார்த்து மகிழந்தனர், ரசித்தனர்.

ஆயிரக்கணக்கில் குவிந்த மக்கள்

ஆயிரக்கணக்கில் குவிந்த மக்கள்

உட்ஸ் இந்தியா வந்தது இதுவே முதல் முறையாகும். எனவே அவரைப் பார்க்க ஆயிரக்கணக்கானோர் டெல்லி கோல்ப் கோர்ஸ் பகுதியில் திரண்டு விட்டனர்.

ஹீரோ மோட்டார்ஸ் முஞ்சாலுக்காக

ஹீரோ மோட்டார்ஸ் முஞ்சாலுக்காக

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியும், நிர்வாக இயக்குநருமான பவன் முஞ்சால் அழைப்பின் பேரிலேயே உட்ஸ் டெல்லி வந்திருந்தார்.

சச்சினுடன்

சச்சினுடன்

முஞ்சால் உள்ளிட்ட அவரது விருந்தினர்களுடன் கோல்ப் ஆடினார் உட்ஸ். முஞ்சாலின் விருந்தினர்களில் முக்கியமானவர் சச்சின் டெண்டுல்கர். அவரும், உட்ஸும் சந்தித்துப் பேசியது சுவாரஸ்யாமா்ன காட்சியாக அனைவருக்கும் இருந்தது.

ரூ. 15 கோடி கட்டணம்

ரூ. 15 கோடி கட்டணம்

இந்தப் போட்டியில் கலந்து கொள்வதற்கு ரூ. 15 கோடி கட்டணமாக உட்ஸுக்குத் தரப்பட்டதாக கூறப்படுகிறது.

பிரண்ணாய் ராய்

பிரண்ணாய் ராய்

நேற்றைய நிகழ்ச்சியில் என்டிடிவி பிரண்ணாய் ராயும் கலந்து கொண்டார். அவரும் உட்ஸுடன் இணைந்து கோல்ப் விளையாடினார்.

Story first published: Wednesday, February 5, 2014, 9:03 [IST]
Other articles published on Feb 5, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+