Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கடின உழைப்புக்கு கிடைத்த பலன்.. சாதனை படைக்க ஒலிம்பிக் செல்லும் தமிழக வீராங்கனை.. குவியும் பாராட்டு!

திருச்சி: ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தை சேர்ந்த தடகள வீராங்கனை ஒருவர் தேர்வாகி அசத்தியுள்ளார்.

கொரோனா காரணமாக கடந்தாண்டு ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள் இந்தாண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறவுள்ளது.

வரும் ஜூலை 23ம் தேதி முதல் ஆகஸ்ட் 8ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த போட்டிக்கான இறுதிகட்ட பணிகள் நடைபெற்றுவருகிறது.

தமிழக வீராங்கனை

தமிழக வீராங்கனை

ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச்சுற்றுகள் தற்போது உலகளவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் இருந்து இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டு பிரிவுகளின் கீழ் தகுதிப்பெற்றுள்ளனர். இந்நிலையில் தடகள விளையாட்டு போட்டியில் தமிழகத்தை சேர்ந்த தனலெட்சுமி தேர்வு ஆகியுள்ளார்.

தகுதிச்சுற்று போட்டி

தகுதிச்சுற்று போட்டி

பாட்டியாலாவில் நடைபெற்ற தகுதிச்சுற்று போட்டியில் நேற்று முன்தினம் தனலெட்சுமி பங்கேற்றிருந்தார். 400 மீட்டர் தொடர் (ரிலே) ஓட்டமாக நடைபெற்ற இந்த போட்டியில் தனலெட்சுமி 3-வது இடத்தை பிடித்து அசத்தினார். இதனையடுத்து அவர் ஒலிம்பிக்கின் 400மீ பிரிவில் தேர்வாகியுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

யார் இந்த தனலெட்சுமி

யார் இந்த தனலெட்சுமி

22 வயதான வீராங்கனை தனலெட்சுமி, திருச்சி மாவட்டம் குண்டூர் பகுதியை சேர்ந்த சேகர்-உஷா தம்பதியரின் மகள் ஆவார். மிகவும் கடினமான சூழலிலும் பல்வேறு போட்டிகளில் கலந்துக்கொண்டு பதக்கங்களை குவித்து வந்த இவர், பாட்டியாலாவில் நடைபெற்ற போட்டி மூலம் அனைவரின் பார்வைக்கும் தெரியவந்தார்.

சாதனை நாயகி

சாதனை நாயகி

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் கடந்த மார்ச் 20ம் தேதி நடைற்ற 100 மீ ஓட்டத்தில் தனலெட்சுமி தங்கம் வென்று அசத்தினார். 100 மீ தூரத்தை 11.39 வினாடிகளில் கடந்து சர்வதேச வீராங்கனை டூட்டி சந்த், ஹீமா தாஸ் ஆகியோரை பின்னுக்கு தள்ளி புதிய சாதனை படைத்தார். இவர் அடுத்ததாக ஒலிம்பிக் போட்டியிலும் சாதனை படைப்பார் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Story first published: Tuesday, July 6, 2021, 17:39 [IST]
Other articles published on Jul 6, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+