தேசிய சீனியர் கூடைப்பந்து இன்று துவங்குகிறது
சென்னை: 68வது தேசிய சீனியர் கூடைப்பந்து போட்டிகள் சென்னையில் இன்று துவங்குகிறது. இதில் கடும் சவால் விடுக்க தமிழக அணி தயாராக உள்ளது.
68வது தேசிய சீனியர் கூடைப்பந்து போட்டிகள் சென்னையில் இன்று துவங்குகிறது. ஆடவர் பிரிவில் உத்தரகண்ட் அணியும் மகளிர் பிரிவில் கேரளாவும் நடப்பு சாம்பியன்களாக உள்ளன.

ஆடவர் பிரிவில் பஞ்சாப் அணியும், மகளிர் பிரிவில் கேரளாவும் மிகவும் வலுவான அணிகளாக உள்ளன. செர்பியாவைச் சேர்ந்த தலைமை கோச் மிலன் ஒபாசிக் கடந்த 45 நாட்களாக தமிழக ஆடவர் மற்றும் மகளிர் அணிக்கு தீவிரப் பயிற்சி அளித்துள்ளார். அதனால் மிகுந்த தன்னம்பிக்கையுடன் களமிறங்குகிறது தமிழக அணி.
ஆடவர் பிரிவில் தமிழகம் முதல் ஆட்டத்தில் ஹரியானாவையும் மகளிர் பிரிவில் மத்தியப் பிரதேசத்தையும் சந்திக்கின்றன. சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இந்தப் போட்டிகள் நடக்க உள்ளன.
ஆடவர் அணியின் கேப்டன் அகிலன் பாரி 8வது முறையாகவும், மகளிர் அணி கேப்டன் அழகு தமிழ்மொழி 9வது முறையாகவும் தேசியப் போட்டியில் பங்கேற்கின்றனர். அவர்களுடைய அனுபவம், செர்பிய கோச்சின் பயிற்சி ஆகியவை அணிக்கு பலமாகும்.
16 வயதுக்குட்பட்டோர் ஆசிய கோப்பை போட்டிக்காக இந்திய அணிக்கு விளையாடியுள்ள புஷ்பா, மிகச் சிறந்த அனுபவத்துடன் களமிறங்குகிறார்.
ஆடவர் பிரிவில் பி பிரிவில் பஞ்சாப், ஹரியானா, ரயில்வேஸ், குஜராத் ஆணிகளுடன் தமிழகம் இடம்பெற்றுள்ளது. மகளிர் பிரிவில் ஏ பிரிவில் கேரளா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், கர்நாடகா அணிகளுடன் தமிழகம் இடம்பெற்றுள்ளது.
Story first published: Wednesday, January 17, 2018, 11:47 [IST]
Other articles published on Jan 17, 2018


Click it and Unblock the Notifications