சர்வதேச கால்பந்து போட்டிகளில் நடுவராக செயல்பட தமிழகத்தை சேர்ந்த ரூபாதேவி தேர்வு
சென்னை: சர்வதேச கால்பந்து போட்டிகளுக்கான நடுவராக தமிழகத்தை சேர்ந்த ரூபாதேவி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல்லை சேர்ந்த ரூபாதேவி, இலங்கை, நேபாள நாடுகளில் நடைபெற்ற சர்வதேச கால்பந்து போட்டிகளில் பங்கேற்றவர். தற்போது மத்திய பிரதேசத்தில் நடைபெற்று வரும் சீனியர் மகளிர் கால்பந்து போட்டிகளுக்கான நடுவராக பணியாற்றுகிறார்.

சர்வதேச கால்பந்து போட்டிகளுக்கான நடுவராக தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் பெண் நடுவர் ரூபாதேவி.
இதேபோல் கோவையை சேர்ந்த கிருஸ்ணாவையும் நடுவராக தேர்வு செய்துள்ளது சர்வதேச கால்பந்து சம்மேளனம் என்பது குறிப்பிடத்தக்கது.
Story first published: Saturday, January 2, 2016, 12:48 [IST]
Other articles published on Jan 2, 2016


Click it and Unblock the Notifications