
மொத்த வீரர்கள்
இந்தியாவின் சார்பில் 126 வீரர்கள் மற்றும் அதிகாரிகள், பயிற்சியாளர்கள் என 75 பேர் டோக்கியோவுக்கு செல்ல தேர்வாகியுள்ளனர். இந்த முறை 56 சதவீதம் வீரர்களுக்கும், 44 சதவீதம் வீராங்கனைகளுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஒலிம்பிக்கின் தொடக்க நாளன்று இந்திய தேசியக்கொடியை ஏந்திச்செல்ல மகளிர் அணி சார்பில் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் மற்றும் ஆண்கள் அணி சார்பில் இந்திய ஹாக்கி அணி கேப்டன் மன்ப்ரீத் சிங் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பட்டியலில் தமிழர்கள்
இந்த பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த 12 பேர், பல பிரிவுகளின் கீழ் பங்கேற்கவுள்ளனர். தமிழகத்தில் இருந்து நான்காவது முறையாக ஒலிம்பிக் தொடரில் பங்கேற்க உள்ள டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் தமிழ்நாடு ஒலிம்பிக் வீரர்கள் குழுவுக்கு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

வீரர்களின் விவரம்
வாள் சண்டை பிரிவில் பங்கேற்கவுள்ள முதல் இந்தியராக, தமிழகத்தைச் சேர்ந்த பவானி தேவி திகழவுள்ளார். சரத் கமல் (டேபிள் டென்னிஸ் - ஆண்கள் ஒற்றையர் பிரிவு மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவு), சதயன் ஞானசேகரன் (டேபிள் டென்னிஸ் - ஆண்கள் ஒற்றையர் பிரிவு மட்டும்) வருண் அசோக் தக்கர் (படகுப் போட்டி - ஆண்கள் பிரிவு) கேசி ஞானபதி (படகுப் போட்டி - ஆண்கள் பிரிவு) நீத்ரா குமணன் (படகுப் போட்டி - ஆண்கள் பிரிவு) இளவேனில்வளரிவன் (துப்பாக்கிச் சுடுதல் - 10 மீட்டர் ஏர் ரைப்பிள், பெண்கள் ஒற்றையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவு)

தடகளத்தில் தமிழர்கள்
ராஜீவ் ஆரோக்கியா ( 4*400 ரிலே), நாகநாதபாண்டி ( 4*400 ரிலே), ரேவதி வீரமணி ( 4*400 கலப்பு பிரிவு ரிலே) சுபா வெங்கடேசன் ( 4*400 கலப்பு பிரிவு ரிலே), தனலெட்சுமி சேகர் ( 4*400 கலப்பு பிரிவு ரிலே). இந்தியாவில் முதல் முறையாக ஒரே மாநிலத்தில் இருந்து தடகள வீரர்கள் 5 பேர் ஒலிம்பிக் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Recommended Video

ஊக்கத்தொகை
ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றால் ரூ.3 கோடி, வெள்ளிப் பதக்கம் வென்றால் ரூ.2 கோடி, வெண்கலம் வென்றால் ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் ஒலிம்பிக்கில் கலந்துக்கொள்ளும் தமிழக வீரர்கள், வீராங்கனைகளுக்கு தலா ரூ.5 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications