Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Tokyo Olympic: தொடரும் "நீயா - நானா" யுத்தம்.. அமெரிக்கா - சீனா இடையே "நெக் டூ நெக்" மோதல்

ஜப்பான்: டோக்கியோ ஒலிம்பிக் தொடரில், அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே கடும் மோதல் நீடிக்கிறது. கிட்டத்தட்ட நீயா நானா போக்கு தான்.

உலகை அலைக்கழிக்கும் இந்த கொரோனா காலக் கட்டத்தில், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றது.

கொரோனா காரணமாக, ரசிகர்கள் இன்றி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு தேசங்களில் இருந்து ஆயிரக்கணக்கான வீரர்கள் இத்தொடரில் பங்கேற்று வருகின்றனர்.

 22 பதக்கங்கள்

22 பதக்கங்கள்

டோக்கியோ ஒலிம்பிக் பதக்கப் பட்டியலின் முதல் நாளே முதல் இடம் பிடித்தது சீனா தான். ஆனால், அதன்பிறகு அமெரிக்க உஷாராகி மெடல்களை அள்ளிக்குவித்து வருகிறது. சீனாவும் சளைக்காமல் பதக்கங்களை தங்கள் பையில் நிரப்பி வருகிறது. இன்று (ஜுலை) மாலை 6 மணி நிலவரப்படி அமெரிக்கா தங்கம் 9, வெள்ளி 5, வெண்கலம் 8 என மொத்தம் 22 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது.

 ஜப்பான் மூன்றாமிடம்

ஜப்பான் மூன்றாமிடம்

சீனா தங்கம் 9, வெள்ளி 5, வெண்கலம் 7 என மொத்தம் 21 பதக்கங்களுடன் 2வது இடத்தில் உள்ளது. ஜப்பான் தங்கம் 9, வெள்ளி 5, வெண்கலம் 3 என மொத்தம் 17 பதக்கங்களுடன் 3வது இடத்தில் உள்ளது. ரஷ்யா 5 தங்கம், 7 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 16 பதக்கங்களுடன் 4 வது இடத்தில் உள்ளது.

 ஆஸி., 6வது இடம்

ஆஸி., 6வது இடம்

இங்கிலாந்து 4 தங்கம், 5 வெள்ளி, 1 வெண்கலம் என மொத்தம் 10 பதக்கங்களுடன் 5 வது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா 3 தங்கம், 1 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 9 பதக்கங்களுடன் 6 வது இடத்தில் உள்ளது. தென்கொரியா 3 தங்கம், 0 வெள்ளி, 4 வெண்கலம் எ மொத்தம் 7 பதக்கங்களுடன் 7 வது இடத்தில் உள்ளது. ஒரு வெள்ளியுடன் இந்தியா தரவரிசையில் 38 வது இடத்தில் உள்ளது.

 ஒரே நம்பிக்கை

ஒரே நம்பிக்கை

பளுதூக்குதல் பிரிவில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார். அதன் பிறகு இந்திய அணிக்கு சில வாய்ப்புகள் கிடைத்தும் அதனை மெடலாக மாற்றும் வாய்ப்பு கை நழுவிப் போனது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இளவேனில் வாலறிவன் உட்பட சில வீரர், வீராங்கனைகள் ஆட்டம் பெரும் ஏமாற்றம் அளிக்கும் வகையில் அமைந்தது. எனினும், இந்திய அணி இன்னும் சில பதக்கங்களை நிச்சயம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Tuesday, July 27, 2021, 21:41 [IST]
Other articles published on Jul 27, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+