Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியது.. அதிரவைத்த வானவேடிக்கைகள்.. செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் என்ன?

டோக்கியோ: உலகமே எதிர்பார்த்து காத்திருந்த டோக்கியோ ஒலிம்பிக் 2020 போட்டிகள் தொடங்கியது.

கொரோனா காரணமாக கடந்தாண்டு தள்ளிவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள் மிகுந்த பாதுகாப்புகளுக்கு இடையே இன்று தொடங்கியுள்ளது.

தொடக்க விழா

தொடக்க விழா

உலக புகழ்பெற்ற ஒலிம்பிக் போட்டிகள் வழக்கமாக மிகவும் பிரமாண்ட முறையில் தொடங்கும். ஆனால் இந்தாண்டு கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் போட்டிகள் தொடங்குவதால், எந்தவித மக்கள் ஆரவாரமும் இன்றி நடத்தப்பட்டுள்ளது. டோக்கியோவில் அமைந்துள்ள சர்வதேச மைதானத்தில் வான வேடிக்கைகளுடன் தொடங்கப்பட்டது.

கொரோனா முன்னெச்சரிக்கை

கொரோனா முன்னெச்சரிக்கை

தொடக்க விழாவில் முக்கிய பங்கு வகிக்கும், நடனங்கள் பெரிய அளவில் ஏற்பாடு செய்யாமல், சமூக இடைவெளியுடன் கூடிய எளிமையான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. எப்போதும் போல பல நாடுகளில் இருந்து நடிகர், நடிகைகள், திரை பிரபலங்களுக்கெல்லாம் இந்த முறை அழைப்பு விடுக்கப்படவில்லை. கிட்டத்தட்ட 10,000 வீரர், வீராங்கனைகள் தங்கள் நாட்டின் கொடியுடன் அணிவகுப்பு நடத்துவார்கள். இந்த முறை ஆனால் இந்த முறை அவை பாதிக்கும் மேல் குறைக்கப்பட்டுள்ளது.

ரசிகர்கள் இல்லை

ரசிகர்கள் இல்லை

டோக்கியோ நகரத்தில் அவசர நிலை பிரகடணம் செய்யப்பட்டுள்ளது. எனவே தொடக்க விழாவில் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மிகவும் முக்கியமான நபர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. அந்தவகையில் 1000க்கும் குறைவான நபர்களே ஸ்டேடியத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அணி வகுப்பு நிகழ்ச்சி

அணி வகுப்பு நிகழ்ச்சி

ஒலிம்பிக் போட்டியின் முக்கிய நிகழ்ச்சியான கொடி அணிவகுப்பில் முதாலவதாக சீன நாட்டை சேர்ந்த குழுவினர் அணி வகுப்பு நடத்தினர். இந்தியாவின் சார்பில் உலக குத்துச்சண்டை சாம்பியனான மேரி கோம் மற்றும் இந்திய ஹாக்கி அணி கேப்டன் மன்ப்ரீத் சிங் ஆகியோர் தேசிய கொடியை ஏந்தி அணி வகுப்பு நடத்துகின்றனர்.

Story first published: Friday, July 23, 2021, 18:10 [IST]
Other articles published on Jul 23, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+