Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வெண்கலப்பதக்கத்திற்கான மோதல்.. இந்தியாவுடன் மோதவிருக்கும் அணி எது .. கடும் சவால் காத்துள்ளது

டோக்கியோ: ஒலிம்பிக் ஹாக்கி தொடரில் வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் இந்தியா, எந்த அணியுடன் மோதவுள்ளது என்பது தெரியவந்துள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக்கின் இன்றைய நாளில் ஹாக்கி போட்டியின் மீது இந்திய ரசிகர்களின் கவனம் திரும்பியது.

ஒலிம்பிக் 2020 தொடரின் ஆண்கள் அரையிறுதி ஹாக்கி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் பெல்ஜியம் அணிக்கு எதிர்த்து போட்டியிட்ட இந்திய ஆடவர் ஹாக்கி அணி தோல்வி அடைந்து வெளியேறி உள்ளது.

 தொடக்கம் எப்படி

தொடக்கம் எப்படி

இந்த ஹாக்கி போட்டியில் இந்திய அணி தான் முதலில் 2 கோல்களை போட்டு முன்னிலை வகித்தது என்றாலும், பெல்ஜியம் அணி அடுத்தடுத்து கோல் மழை பொழிந்து மீண்டு வந்தது. பெனால்டி கார்னர் ஷாட்கள் அதிகம் விட்டுக்கொடுக்கப்பட்டதால் அந்த அணி எளிதாக 5 : 2 என்ற கணக்கில் இந்தியாவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்தியா தோல்வி

இந்தியா தோல்வி

அரையிறுதிப்போட்டியில் தோல்வி அடைந்ததால் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி ஆட வேண்டும். ஆகஸ்ட் 5ம் தேதி இந்தியா வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் ஆட உள்ளது. இதில் இந்திய அணி எதிர்கொள்ள போகும் அணி எது என்பது குறித்து தெரியாமல் இருந்து வந்தது. இன்று ஆஸ்திரேலியா - ஜெர்மணி மோதும் 2வது அரையிறுதிப்போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதை பொறுத்து முடிவு கூறப்படவிருந்தது.

2வது அரையிறுதிப்போட்டி

2வது அரையிறுதிப்போட்டி

இந்நிலையில் இந்தியாவுடன் வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் மோதப்போகும் அணி எதுவென்பது தெரியவந்துள்ளது. அனைவரும் எதிர்பார்த்தபடியே ஆஸ்திரேலியா - ஜெர்மணி மோதிய 2வது அரையிறுதிப்போட்டி பரபரப்பாக இருந்தது. இரு அணிகளும் பலம் வாய்ந்தது என்பதால் கோலுக்காக கடுமையாக போராடின. இறுதியில் 3: 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

சவாலான போட்டி

சவாலான போட்டி

இந்த போட்டியில் தோல்வியடைந்த ஜெர்மணி அணியும், முதல் அரையிறுதியில் தோல்வியடைந்த இந்திய அணியும் தான் வெண்கலப்பதக்கத்திற்காக போட்டிப்போடவுள்ளது. லீக் ஆட்டத்தின் போது இந்தியாவின் குழுவில் ஜெர்மனி இடம்பெறவில்லை. இதனால் செமி பைனல் வரை ஜெர்மனியை இந்தியா எதிர்கொள்ளவே இல்லை. இந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் ஜெர்மனியை முதல்முறையாக இந்தியா எதிர்கொள்ளவிருக்கிறது. இதனால் இந்தியாவின் வெண்கல பதக்கத்திற்கான ஆட்டம் கண்டிப்பாக மிகவும் சவாலானதாக இருக்கும்.

இறுதிசுற்று

இறுதிசுற்று

முதல் அரையிறுதியில் பெல்ஜியம் அணி வெற்றிபெற்றது. அதே போல 2வது அரையிறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. எனவே பெல்ஜியம் vs ஆஸ்திரேலியா ஆண்கள் ஹாக்கி இறுதி போட்டியில் மோதவிருக்கிறது.

Story first published: Tuesday, August 3, 2021, 23:00 [IST]
Other articles published on Aug 3, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+