Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

1ம் இடத்தில் இருந்து 17வது இடம்.. வாக் ரேஸில் திடீர் ட்விஸ்ட்.. பதக்கத்தை தவறவிட்ட இந்திய வீராங்கனை

ஜப்பான்: ஒலிம்பிக் நடைப்பந்தயம் இறுதிச்சுற்றில் இந்தியாவின் பிரியங்கா கோஷ்வாமி, பாவ்னா ஜாட் பதக்கமின்றி வெளியேறியுள்ளனர்.

டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் கடந்த 3 நாட்களாக இந்தியாவுக்கு பதக்க எண்ணிக்கை அதிகரித்து வந்த சூழலில் இன்று தொடர் சறுக்கல்களாக இருந்து வருகிறது.

இன்று காலை மகளிர் ஹாக்கி அணி வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் தோல்வியடைந்தது இந்திய ரசிகர்களுக்கு வருத்தத்தை அளித்தது. இந்நிலையில் பதக்கம் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த நடைப்பந்தயத்திலும் தோல்வியே மிஞ்சியது.

இறுதிச்சுற்று

இறுதிச்சுற்று

ஒலிம்பிக்கில் நடைப்பந்தயத்திற்கான இறுதிப்போட்டி இன்று மதியம் தொடங்கியது. 20கிமீ தூரத்திற்கான இந்திய பந்தயத்தில் மொத்தமாக பல்வேறு நாடுகளை சேர்ந்த 190 வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தியாவின் சார்பில் பிரியங்கா கோஷ்வாமி மற்றும் பாவ்னா ஜாட் ஆகியோர் பங்கேற்றனர். பிரியங்கா உலக தரவரிசைப்பட்டியலில் 55வது இடத்திலும், பாவ்னா 139வது இடத்திலும் உள்ளனர்.

நம்பிக்கை

நம்பிக்கை

இறுதிப்போட்டி தொடங்கிய முதல் ஒரு கிலோ மீட்டர் தூரத்திலேயே இந்திய வீராங்கனைகள் இருவருமே சற்று முன்னிலை வகித்து வந்தனர். பிரியங்கா 16வது இடத்திலும், பாவ்னா ஜாட் 35வது இடத்திலும் இருந்தனர். முதல் 5 கிமீ தூரம் வரை இந்த இணை முதல் 10 இடத்திற்கு உள்ளே வரமுடியாமல் இருந்த நிலையில் 6வது கிமீ தூரத்தில் இருந்து பிரியங்கா கோஷ்வாமி 3வது வீராங்கனையாக முன்னேறி ஆச்சரியம் அளித்தார்.

திடீர் சரிவு

திடீர் சரிவு

தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வந்த பிரியங்கா கோஷ்வாமி 8 கிமீ தூரத்தை கடக்கும் போது முதல் இடத்தை வகித்து இந்திய ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்தார். மற்றொரு புறம் பாவ்னா ஜாட் 33வது இடத்திலேயே நீடித்து வந்தார். ஆனால் அதன் பிறகு ஆட்டத்தில் மாற்றம் ஏற்பட்டது. கிமீ அதிகரிக்க அதிகரிக்க முதலிடத்தில் இருந்த பிரியங்கா, படிப்படியாக பின்னடைவை சந்தித்தார். 7, 9, 10, 15, 17 எனத்தொடர்ந்து பின் நோக்கி சென்றுக்கொண்டிருந்தார்.

ஏமாற்றம்

ஏமாற்றம்

சீரான வேகத்தில் வந்துக்கொண்டிருந்த பாவ்னா ஜாட் 32 என அதே நிலையில் நீடித்து வந்தார். இறுதியில் பிரியங்கா கோஷ்வாமி 17வது இடத்தை பிடித்தார். 20 கிமீ தூரத்தை அவர் 1:32:36 மணி நேரத்தில் கடந்தார். இதே போல பாவ்னா ஜாட் 32வது வீராங்கனையாக பந்தயத்தை முடித்தார். போட்டி தூரத்தை அவர் கடக்க 1:37: 38 மணி நேரம் எடுத்துக்கொண்டார். இத்தாலியை சேர்ந்த அண்டோனல்ல என்ற வீராங்கனை 1:29:12 மணி நேரத்தில் முடித்து தங்கப்பதக்கம் வென்றார்.

Story first published: Friday, August 6, 2021, 20:59 [IST]
Other articles published on Aug 6, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+