Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவின் பதக்க கனவு தகர்ந்தது.. மகளிர் குத்துச்சண்டை.. காலிறுதிப்போட்டியில் பூஜா ராணி தோல்வி!

ஜப்பான்: டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின், மகளிர் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை பூஜா ராணி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தார்.

Tokyo Olympics 2020: Indias Pooja Rani lose against Qian Li of China (75kg) quarterfinal

டோக்கியோ ஒலிம்பிக்கில் கடந்த 2 நாட்களாக தான் இந்தியாவுக்கு சிறப்பான நாட்களாக அமைந்துள்ளது. வழக்கத்தை விட கூடுதலாக வீரர், வீராங்கனைகள் தேர்வான போதும், எதிர்பார்த்த அளவுக்கு பதக்கங்கள் கிடைக்காமல் இருந்தது.

இந்தியாவுக்காக பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு முதல் பதக்கம் (வெள்ளி) பெற்றுக் கொடுத்ததே ஆறுதலாக இருந்தது. நேற்று ஒரே நாளில் இரண்டு பதக்கங்கள் உறுதியானது.

குத்துச்சண்டையில் லோவ்லினா அரையிறுதிக்கு முன்னேறி வெண்கலப்பதக்கத்தை உறுதி செய்துள்ளார். அதேபோல், பேட்மிண்டனில் பி.வி.சிந்து, அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். இந்நிலையில் இந்தியாவுக்கு 4வது பதக்கத்தை உறுதி செய்யும் வகையில் இன்று மகளிர் குத்துச்சண்டை 75 கிலோ எடைபிரிவுக்கான அரையிறுதிப்போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியாவின் பூஜா ராணி மற்றும் சீனாவின் குயான் லி ஆகியோர் மோதினர்.

தொடக்கம் முதலே சீன வீராங்கனையின் கையே ஓங்கி இருந்தது. அவரின் பஞ்ச்-கள் அவ்வபோது சரிவர உதவாததால், முதல் சுற்றின் முடிவில் சீனாவின் குயான் லி 0 - 5 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றினார். ஆனால் அதன்பின்னரும் பூஜா ராணியால் மீண்டு வர முடியவில்லை. இதன் காரணத்தால் 2வது சுற்றிலும் 0 -5 என்ற கணக்கில் பறிகொடுத்து தோல்வியை தழுவினார். இதனால் டோக்கியோ ஒலிம்பிக்கில் அவரின் பதக்க கனவு தகர்ந்தது.

தனது முதல் ஒலிம்பிக்கிலேயே காலிறுதிப்போட்டி வரை சென்ற சென்றதால் குத்துச்சண்டை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். முன்னதாக மே மாதத்தில் உலக சாம்பியன் அதெய்னா பைலோனை வீழ்த்தி தங்கம் வென்றார். பாக்ஸம் சர்வதேச குத்துச் சண்டைப் போட்டியிலும் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். பெண்கள் குத்துச் சண்டைப் போட்டியில் மேரி கோமுக்குப் பிறகு பதக்கம் வெல்லும் வாய்ப்பு பூஜா ராணிக்கு அதிகமாக இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அவர்கள் இருவருமே பதக்கம் இன்றி திரும்பியிருப்பது ஏமாற்றத்தை அளித்துள்ளது.

Story first published: Saturday, July 31, 2021, 18:08 [IST]
Other articles published on Jul 31, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+