வாழ்வா? சாவா?.. இந்தியாவுக்கு நாளை உள்ள முக்கிய போட்டிகள்.. நேரங்கள் என்னென்ன? - முழு விவரம்
ஜப்பான்: ஒலிம்பிக்கின் நாளைய நாளில் இந்தியாவுக்கு பல முக்கியமான போட்டிகள் நடைபெறவுள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இன்று இந்தியாவுக்கு ஒரு புறம் ஹாக்கி, வட்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகளில் நற்செய்தி கிடைத்திருந்தாலும், பேட்மிண்டன், குத்துச்சண்டை உள்ளிட்ட போட்டிகளால் ஏமாற்றம் கிடைத்துள்ளது.
இந்நிலையில் ஒலிம்பிக்கின் நாளைய போட்டியில் இந்தியாவுக்கு என்னென்ன போட்டிகள் நடைபெறவுள்ளது மற்றும் அதன் நேரங்கள் குறித்த அட்டவணை வெளியாகியுள்ளது.

குதிரையேறுதல்
இந்தியாவின் ஃபௌத் மிர்சா ஈவண்டிங்கின் பிரிவின் 3வது செஷன் போட்டியில் பங்குபெறவுள்ளார். இந்த போட்டி நாளை காலை 4.15 AM மணிக்கு நடைபெறவுள்ளது. இதே போல ட்ரெஸிங் 3வது செஷனிலும் பங்கேற்கவுள்ளார். இவர் ஏற்கனவே நடைபெற்ற 2வது செஷன் போட்டியில் 9வது இடத்தை பிடித்திருந்தார்.

கோல்ஃப் போட்டி
இந்தியாவின் உதயன் மானே மற்றும் அனிர்பன் லஹிரி ஆகியோர் ஆடவர் ஒற்றையர் பிரிவின் 4வது சுற்றுப்போட்டியில் கலந்துக்கொள்ளவுள்ளனர். இதில் மானேவின் ஆட்டம் காலை 4 AM மணிக்கும், லஹிரியின் ஆட்டம் காலை 5.55 AM மணிக்கும் தொடங்கவுள்ளது.

பாக்ஸிங்
ஆடவர் ஹெவிவெயிட் பிரிவு காலிறுதிப்போட்டியில் இந்தியாவின் சதிஷ் குமார் பங்கேற்கவுள்ளார். இவர் உஸ்பெகிஸ்தானின் பாகோதிரை எதிர்த்து போட்டிப்போடவுள்ளார். இந்த போட்டி 9.36 AM மணிக்கு நடைபெறவுள்ளது.

பேட்மிண்டன் போட்டி
இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை தனது வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் பங்கேற்கவுள்ளார். இந்த போட்டி நாளை மாலை 5PM மணிக்கு நடைபெறவுள்ளது. சிந்து ஏற்கனவே அரையிறுதி சுற்றில் தோல்வியடைந்ததால் இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

ஹாக்கி
இந்திய ஆடவர் ஹாக்கி அணி காலிறுதிப்போட்டியில் பங்கேற்கவுள்ளது. இந்த போட்டியில் கிரேட் பிரட்டன் அணிக்கு எதிர்த்து இந்தியா போட்டிப்போடவுள்ளது. நாளை மாலை 5.30 PM மணிக்கு நடைபெறவுள்ளது.


Click it and Unblock the Notifications