Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

41 ஆண்டுகால காத்திருப்புக்கு பலன்.. அரையிறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்திய ஆடவர் ஹாக்கி அணி!

ஜப்பான்: ஒலிம்பிக் இந்திய ஆடவர் ஹாக்கி அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது.

Recommended Video

41 ஆண்டுகளுக்கு பிறகு.. Great Britain-ஐ வீழ்த்தி Semi Finals-க்கு முன்னேறிய Indian Men's Hockey Team

டோக்கியோ ஒலிம்பிக்கின் இன்றைய நாளில் இந்தியாவுக்கு சிறப்பாக அமைந்துள்ளது. பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து வெண்கலப்பதக்கம் வென்று பெருமை சேர்த்து கொடுத்தார்.

இந்நிலையில் இந்திய ஆடவர் ஹாக்கி அணியும் தனது பங்கிற்கு காலிறுதிப்போட்டியில் வெற்றியை பரிசாக கொடுத்துள்ளது.

 காலிறுதிக்கு தகுதி

காலிறுதிக்கு தகுதி

ஒலிம்பிக்கில் ஆடவர் ஹாக்கியில் மொத்தம் உள்ள 4 லீக் போட்டிகளில் இந்திய அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதிப்பெற்றுவிட்டது. நேற்று நடைபெற்ற 4வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் இதில் இந்திய அணி, ஜப்பான் நாட்டு அணியை எதிர்த்து போட்டியிட்டது. இந்த போட்டியில் பெரும் நம்பிக்கையுடன் விளையாடி இந்திய அணி இறுதியில் 5 - 3 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

முதல் சுற்று

முதல் சுற்று

இந்நிலையில் இன்று காலிறுதிப்போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கிரேட் பிரிட்டன் அணியை எதிர்த்து இந்திய ஆடவர் அணி போட்டிப்போட்டது. லீக் போட்டிகளில் 3 வெற்றிகளை தனதாக்கிய இந்திய அணி, மிகுந்த நம்பிக்கையுடன் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே அட்டாக்கிங் கேம்மை மேற்கொண்டது. இதனால் ஆட்டத்தின் முதல் சுற்றில் கோல் அடித்து முன்னிலைப்பெற்றது. இந்தியாவின் தில்பிரீத் சிங் இந்த கோலினை அடித்தார்.

2ம் கோல்

2ம் கோல்

இடைவெளிக்கு பின்னர் நடந்த 2வது சுற்றுப்போட்டியிலும் இந்திய அணியின் ஆதிக்கமே நிறைந்திருந்தது. நட்சத்திர வீரர் குஜராந்த் சிங் 2வது கோல் அடித்து அசத்தினார். இதன் மூலம் இந்திய அணி ஆட்டத்தின் முதல் பாதியில் 2 - 0 என்ற கணக்கில் வலுவாக இருந்தது.

இந்த முன்னிலை ஆனது ஆட்டத்தின் 2வது சுற்று வரை நீடித்தது. எனவே இந்தியாவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக பார்க்கப்பட்டது.

பரபரப்பு நொடிகள்

பரபரப்பு நொடிகள்

ஆனால் ஆட்டத்தின் 3வது சுற்றில் பிரிட்டன் அணி திடீர் கம்பேக் கொடுத்தது. பெனால்டி கார்னர் மூலம் அந்த அணியின் சாம் வார்ட் கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1 - 2 என்ற கணக்கிற்கு மாறி பரபரப்பு ஏற்பட்டது. இன்னும் சிறிது நேரம் தடுப்பாட்டம் செய்தால் இந்தியா வென்றுவிடும் என்ற நிலையில் ஹர்டிக் சிங் மீண்டும் ஒரு கோல் அடித்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார்.

அபார வெற்றி

அபார வெற்றி

இறுதியில் கிரேட் பிரிட்டன் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய ஆடவர் ஹாக்கி அணி அரையிறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதனையடுத்து இந்திய அணிக்கு ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

வரலாறு படைக்குமா?

வரலாறு படைக்குமா?

ஒலிம்பிக்கில் மட்டும் இதுவரை 11 பதக்கங்களை வென்றிருக்கிறது இந்திய அணி. அதில் 8 தங்கப்பதக்கங்கள், 1 வெள்ளி, 2 வெங்கலப்பதக்கங்கள் ஆகும். வேறெந்த அணியாலும் இன்னமும் இந்த சாதனையை உடைக்க முடியவில்லை. ஆனால் ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய ஹாக்கி அணி 1980ம் ஆண்டுக்கு பிறகு இதுவரை ஒரு முறை கூட பதக்கத்தை வெல்லவில்லை. பதக்கம் வென்று 41 ஆண்டுகள் ஆகிவிட்டது. எனவே 41 ஆண்டுகால பெருமையை இந்த முறை இந்திய ஆடவர் ஹாக்கி அணி காப்பாற்றியுள்ளது.

Story first published: Sunday, August 1, 2021, 23:03 [IST]
Other articles published on Aug 1, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+