Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவின் ஒரே நம்பிக்கை பொய்யானது.. மகளிர் நீச்சல் போட்டி..மானா படேல் 2வதாக வந்தும் பதக்கம் இல்லை

ஜப்பான்: ஒலிம்பிக்கில் மகளிருக்கான நீச்சல் போட்டியில் இந்தியாவின் மானா படேல் ஏமாற்றம் அளித்துள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் 2வது நாளான இன்றும் இந்தியாவுக்கு சற்று சறுக்கலாகவே உள்ளது.

இந்நிலையில் இந்தியாவின் சார்பில் நீச்சல் போட்டியில் கலந்துக்கொண்ட ஒரே ஒரு வீராங்கனையான மானா படேலும் தொடரில் இருந்து வெளியேறியுள்ளார்.

2வது இடம் பிடித்தார்

2வது இடம் பிடித்தார்

ஒலிம்பிக் வரலாற்றிலேயே நீச்சல் போட்டியில் இந்தியாவின் சார்பில் தேர்வான முதல் பெண்மணி மானா படேல் ஆகும். ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இவருக்கான தகுதிச்சுற்று போட்டி இன்று நடைபெற்றது. மகளிர் 100மீ பேக் ஸ்ட்ரோக் ஹீட்ஸ் பிரிவில் கலந்துக்கொண்ட அவர் போட்டி தூரத்தை 1:05:20 நிமிடத்தில் கடந்து 2வது இடம் பிடித்தார். சிம்பாவேவை சேர்ந்த நீச்சல் வீராங்கனை முதலிடம் பிடித்தார். மானா படேலுக்கும், முதலிடம் பிடித்தவருக்குமான கால வித்தியாசம் 3 நொடிகள் மட்டுமே.

பின்னடைவு

பின்னடைவு

மொத்தம் 6 குழுக்களாக இந்த நீச்சல் போட்டி நடைபெற்றது. எனவே ஒட்டுமொத்த நீச்சல் வீராங்கனைகளும் போட்டி தூரத்தை கடந்த கால அளவு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அதன்படி மானா பட்டேல் 39வது இடத்தை பிடித்துள்ளார். ஆனால் அரையிறுதிப்போட்டிக்கு முன்னேற டாப் 16 இடங்களுக்குள் வரவேண்டும் என்பதால் அதிகாரப்பூர்வமாக டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறினார் மானா படேல்.

நம்பிக்கை

நம்பிக்கை

21 வயதான மானா படேல் அகமதாபாத்தைச் சேர்ந்தவர் ஆகும். 50 மற்றும் 200 மீட்டர் பேக் ஸ்ட்ரோக்கில் தேசிய விளையாட்டு போட்டிகளில் தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார். கடந்த 2018ம் ஆண்டு, சீனியர் தேசிய நீச்சல் சாம்பியன்ஷிப் தொடரில் மூன்று தங்கப் பதக்கங்களை அள்ளி அசத்தியவர் ஆவார். சர்வதேச அளவிலும் அசத்தி வந்த இவருக்கு இது முதல் ஒலிம்பிக் தொடராகும். எனவே இனி வரும் அடுத்தடுத்த ஒலிம்பிக்கில் பங்குபெற்று நிச்சயம் பதக்கம் வெல்வார் என்ற நம்பிக்கையுடன் உள்ளார்.

ஆண்கள் நீச்சல் போட்டி

ஆண்கள் நீச்சல் போட்டி

மகளிர் நீச்சல் போட்டி முடிவுற்ற நிலையில் ஆண்களுக்கான நீச்சல் போட்டி இன்று பிற்பகல் தொடங்கவுள்ளது. இந்தியாவின் ஸ்ரீ ஹரி நடராஜ் இன்று கலந்துக்கொள்ளவுள்ளார். 100மீ பேக்ஸ்ட்ரோக் பிரிவிலேயே பங்குபெறும் இவர் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Story first published: Sunday, July 25, 2021, 17:41 [IST]
Other articles published on Jul 25, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+