Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி: இந்திய அணிக்கு அடித்த அதிர்ஷ்டம்.. காலிறுதிக்கு முன்னேற்றம்!

ஜப்பான்: ஒலிம்பிக் தொடரின் ஹாக்கி போட்டியில் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது இந்திய மகளிர் ஹாக்கி அணி.

Recommended Video

Tokyo Olympics : Indian Women Hockey Team Beats Australia and Qualifies to Semi Finals

டோக்கியோ ஒலிம்பிக் தொடரின் 9வது நாளான இன்று பல்வேறு பதக்கங்களுக்கான போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இதில், குத்துச்சண்டை, வில்வித்தை, பாக்ஸிங் என பல்வேறு போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் சறுக்கல்களை சந்தித்தபோதும், இந்திய மகளிர் ஹாக்கி அணி நம்பிக்கை கொடுத்துள்ளது.

சந்தேகங்கள்

சந்தேகங்கள்

பெண்கள் பிரிவில் இந்திய அணி தொடர் தோல்விகளை சந்தித்து வந்தது. முதல் போட்டியில் நெதர்லாந்துடன் 1-5 என்ற கோல் கணக்கில் மிக மோசமாக தோற்றது. அடுத்ததாக ஜெர்மனி அணியுடன் 0-2 என்ற கோல் கணக்கில் வெற்றிவாய்ப்பை இழந்தது. 3வது போட்டியில் கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிலும் 1-4 என்ற கணக்கில் மிக மிக மோசமாக தோற்று காலிறுதி செல்லுமா என்ற சந்தேகத்தை கிளப்பியது.

அதிக எதிர்பார்ப்பு

அதிக எதிர்பார்ப்பு

இந்த சூழலில் இந்திய அணிக்கு வாழ்வா, சாவா ஆட்டமான கடைசி லீக் ஆட்டம் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் சிறப்பான புள்ளிகள் வித்தியாசத்தில் இந்தியா வென்றால் தான் ஒலிம்பிக் காலிறுதி ஹாக்கி போட்டிக்கு இந்தியா தகுதிப் பெற முடியும் என்பதால், இந்த போட்டி மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

தொடக்கமே சூப்பர்

தொடக்கமே சூப்பர்

போட்டி தொடங்கிய சில நிமிடங்களிலேயே முதல் கோல் அடித்து இந்தியா அசத்தியது. பிறகு முதல் கால் பகுதி ஆட்டத்தின் இறுதி நேரத்தில் தென்னாப்பிரிக்கா ஒரு கோல் அடிக்க ஆட்டம் 1-1 என்ற சமநிலை பெற்றது. இதன் பின்னர் 2வது கால் பகுதி ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் மீண்டும் ஒரு கோல் அடிக்க தென்னாப்பிரிக்க அணி மீண்டும் சமன் செய்தது. இரு அணிகளும் தொடர்ந்து விட்டுக்கொடுக்காமல் கோல் அடித்து வந்த நிலையில் ஆட்டத்தின் இறுதியில் இந்தியா 4 - 3 என்ற புள்ளிக்கணக்கில் த்ரில் வெற்றி பெற்றது.

வெற்றி

வெற்றி

இந்திய அணி வெற்றி பெற்றாலும், புள்ளிகள் குறைவாக இருந்ததால் காலிறுதிப்போட்டிக்கு நேரடியாக செல்ல முடியாமல் இருந்தது. இந்தியா காலிறுதிக்கு முன்னேறுமா இல்லையா என்பதை தீர்மானிக்க குரூப் சுற்றின் மற்றொரு இறுதி ஆட்டத்தில் அயர்லாந்து, இங்கிலாந்து ஆட்டம் தான் முடிவு செய்யும் நிலை ஏற்பட்டது. இதில், அயர்லாந்து அணி இங்கிலாந்திடம் டிரா ஆனாலோ அல்லது தோற்றாலோ இந்திய அணி காலிறுதிக்கு தகுதிப் பெற்றுவிடும். ஒருவேளை அயர்லாந்து இங்கிலாந்தை வீழ்த்திவிட்டால், இந்திய மகளிர் அணி ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறிவிடும். என்ற நிலை இருந்தது.

காலிறுதிக்கு தகுதி

காலிறுதிக்கு தகுதி

இந்நிலையில் இன்று மாலை நடைபெற்ற இந்த போட்டியில் அயர்லாந்து அணி, இங்கிலாந்திடம் 0 - 2 என்ற புள்ளிக்கணக்கில் மோசமாக தோல்வியடைந்தது. இதனால் இந்திய மகளிர் அணி ஒலிம்பிக் காலிறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது உறுதியாகியுள்ளது. இதுவரை நடைபெற்ற 4 போட்டிகளில் இந்தியா ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளதால், காலிறுதியில் எப்படி ஆடப்போகிறது என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Story first published: Saturday, July 31, 2021, 20:47 [IST]
Other articles published on Jul 31, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+