Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பல வருட காத்திருப்பு..பெரும் எதிர்பார்ப்பில் ஹாக்கி அரையிறுதி.. சாதிப்பார்களா இந்திய பெண் சிங்கங்கள்

டோக்கியோ: ஒலிம்பிக்கில் இன்று இந்திய ரசிகர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது மகளிர் ஹாக்கி அணி.

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா இதுவரை 3 பதக்கங்களை வென்றுள்ளது. மீராபாய், பி.வி.சிந்து, லாவ்லினா ஆகியோர் பதக்கங்களை வென்று பெருமை சேர்த்துள்ளனர்.

இந்நிலையில் இந்தியாவுக்கு 4வது பதக்கத்தை உறுதி செய்யக்கூடிய போட்டியாக இன்று மகளிர் ஹாக்கி அரையிறுதி சுற்று நடைபெறவுள்ளது.

விமர்சனங்கள்

விமர்சனங்கள்

டோக்கியோ ஒலிம்பிக் தொடரின் க்ரூப் ஏ-வில் இடம்பெற்றிருந்த இந்திய மகளிர் ஹாக்கி அணி முதலில் சறுக்கலையே சந்தித்தது. லீக் சுற்றின் முதல் 3 போட்டிகளிலுமே மோசமான தோல்விகளை பெற்று ஏமாற்றம் கொடுத்தது. இதனால் இந்த ஒலிம்பிக்கில் மகளிர் ஹாக்கி இனி அவ்வளவு தான் என ரசிகர்கள் முடிவெடுத்துவிட்டனர். ஆனால் யாரும் எதிர்பார்க்காத அசுரத்தனமான கம்பேக் கொடுத்தது இந்திய அணி.

அசத்தல் கம்பேக்

அசத்தல் கம்பேக்

முதல் 3 போட்டிகளில் தோல்வியை சந்தித்த போதும் 4வது லீக் ஆட்டத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தி ஆச்சரியம் கொடுத்தது. பின்னர் புள்ளிக்கணக்குகளின் படி இந்திய அணி ஒரே ஒரு வெற்றி பெற்றிருந்த போதும் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது. அப்போதும் அதிர்ஷ்டத்தால் காலிறுதிக்கு முன்னேறியது என பலரும் விமர்சனம் செய்தனர்.

காலிறுதி

காலிறுதி

ஆனால் காலிறுதிப்போட்டியில் தான் இந்திய மகளிர் அணியின் உண்மையான பலம் தெரியவந்தது. காலிறுதி ஆட்டத்தில் உலக மகளிர் ஹாக்கி தர வரிசையில் 2-வது இடத்தில் இருந்த பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியினரை ஒரு கோல் கூட போட விடாமல் இந்திய அணி தடுத்தது அனைவருக்கும் வியப்பூட்டியது.

ஆச்சரியம்

ஆச்சரியம்

காலிறுதி சுற்று வரை கூட முன்னேறாது என கணிக்கப்பட்ட இந்திய மகளிர் அணி, தங்கம் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி சர்வதேச வீரர்கள் அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியிருந்தது. இந்நிலையில் அந்த உற்சாகத்தை மேலும் அதிகரிக்கக்கூடிய வாய்ப்பாக இன்று அரையிறுதிப்போட்டி நடைபெறவிருக்கிறது.

அரையிறுதி

அரையிறுதி

இந்த அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி, பலம் வாய்ந்த அர்ஜெண்டினாவை எதிர்த்து மோதவுள்ளது. இப்போட்டி இன்று மதியம் 3.30 மணிக்கு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் வரலாற்றில் இந்திய மகளிர் ஹாக்கி அணி முதல் முறையாக அரையிறுதி சுற்று வரை முன்னேறி வந்துள்ளது. இதனை தக்கவைத்துக்கொண்டு இறுதி சுற்றுக்கும் செல்ல வேண்டும் என இந்தியர்கள் வாழ்த்து மழையை சமூக வலைதளங்களில் குவித்து வருகின்றனர்.

தடுப்பாட்டம்

தடுப்பாட்டம்

இந்திய மகளிர் அணியை பொறுத்தவரை அட்டாக்கிங் கேமை விட தடுப்பாட்டத்தில் அதிக பலம் வாய்ந்ததாக உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. எனவே ஆட்டம் தொடங்கிய முதல் சில நிமிடங்களில் கோல் அடித்து விட்டு முழுவதுமாக தடுப்பாட்டத்தில் கவனத்தை செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Wednesday, August 4, 2021, 17:51 [IST]
Other articles published on Aug 4, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+