கடைசி நிமிடத்தில் மாறிய ஆட்டம்.. வெண்கலப்பத்திற்கான மல்யுத்த போட்டி.. தீபக் புனியா போராடி தோல்வி!
ஜப்பான்: டோக்கியோ ஒலிம்பிக்கின் ஆடவர் மல்யுத்தத்தில் வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் இந்தியாவின் தீபக் புனியா போராடி தோல்வியை தழுவினார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் சார்பில் இதுவரை பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் மற்றும் பி.வி.சிந்து, குத்துச்சண்டை வீராங்கனை லாவ்லினா ஆகியோர் பதக்கம் வென்று கொடுத்துள்ளனர். மல்யுத்த வீரர் ரவிக்குமார் வெள்ளிப்பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
இந்திய ஆடவர் ஹாக்கி அணி இன்று காலை வெண்கலப்பதக்கத்தை வென்று அசத்தியது. இந்நிலையில் இன்று இந்தியாவுக்கு 6வது பதக்கத்தை உறுதி செய்யும் வகையில் ஆடவர் மல்யுத்த வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் இந்திய வீரர் தீபக் புனியா ஏமாற்றம் அளித்துள்ளார்.

Story first published: Thursday, August 5, 2021, 18:56 [IST]
Other articles published on Aug 5, 2021


Click it and Unblock the Notifications