Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவுக்கு 5வது பதக்கம்.. மல்யுத்தப்போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார் ரவிக்குமார் தஹியா!

ஜப்பான்: டோக்கியோ ஒலிம்பிக்கின் ஆடவர் மல்யுத்த போட்டியின் இறுதிப்போட்டியில் ரவிக்குமார் தஹியா போராடி தோல்வியடைந்தார். இதன் மூலம் அவர் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் சார்பில் இதுவரை பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய், பி.வி.சிந்து, லாவ்லினா ஆகியோர் பதக்கங்களை வென்றுவிட்டனர். இன்று காலை இந்திய ஆடவர் ஹாக்கி அணி வெண்கலப்பதக்கத்தை வென்றது.

இந்நிலையில் இன்று இந்தியாவுக்கு 5வது பதக்கத்தை உறுதி செய்யும் வகையில் ஆடவர் மல்யுத்த இறுதிப்போட்டியில் இந்திய வீரர் ரவிக்குமார் தஹியா தோல்வியடைந்துள்ளார்.

 அசத்திய ரவிக்குமார்

அசத்திய ரவிக்குமார்

ஒலிம்பிக் 2020 தொடரின் பல்வேறு பிரிவு மல்யுத்த போட்டிகள் கடந்த 5 நாட்களாக நடைபெற்று வருகிறது. ஆண்கள் 57 kg பிரிவில் கலந்துக்கொண்ட ரவிக்குமார் தஹியா தனது முதல் போட்டியிலேயே கொலம்பியாவின் டைக்ரசை 13:2 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி காலிறுதி போட்டிக்கு முன்னேறினார். காலிறுதிப்போட்டியிலும் அவரின் ஆதிக்கமே இருந்தது. பல்கேரியா வீரர் ஜார்ஜி வாலண்டினோவை எதிர்கொண்டார். இந்த போட்டியிலும் தொடக்கம் முதல் ஆக்ரோஷம் காட்டிய ரவிக்குமார் தஹியா 14 - 4 என்ற புள்ளிக்கணக்கில் எளிதாக வெற்றி பெற்று அரையிறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றார்.

 இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

ரவிக்குமார் தஹியாவின் அரையிறுதிப்போட்டி இந்தியர்களின் பதக்க நம்பிக்கையை அதிகரித்தது. கசகஸ்தானை சேர்ந்த நுரிஸ்லாம் சனாயெவை எதிர்கொண்ட அவர், கடைசி நிமிடம் வரை அனைவரையும் நகம் கடிக்க வைத்து வெற்றி பெற்றார். எதிரணி வீரர் 9 புள்ளிகளும், ரவிக்குமார் 7 புள்ளிகளையுமே பெற்றிருந்தனர். ஆனால் கடைசி விநாடிகளில் ஃபால் முறையில் நுரிஸ்ஸாமை வீழ்த்தி அபாரா வெற்றி பெற்று பதக்கத்தை உறுதி செய்தார் ரவிக்குமார்.

 இறுதிப்போட்டி தொடக்கம்

இறுதிப்போட்டி தொடக்கம்

இந்நிலையில் ரவிக்குமார் தஹியாவுக்கான ஆடவர் மல்யுத்தத்தின் இறுதிப்போட்டி இன்று தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் ரஷ்யாவின் சாவூர் உகுயேவை எதிர்த்து அவர் போட்டியிட்டார். மொத்தம் 6 நிமிடங்கள் போட்டி நடைபெறும். அதன்படி ஆட்டத்தின் தொடக்கத்தில் இரு வீரர்களும் ஆக்ரோஷமாக செயல்பட்டனர். இதனால் முதல் 30 விநாடிகளுக்கு ஒரு புள்ளிகள் கூட கிடைக்கவில்லை. ஆனால் இதன் பின்னர் ரஷ்ய வீரரின் கையே ஓங்கி இருந்தது. இதனால் முதல் சுற்றில் 2 - 4 என்ற கணக்கில் ரஷ்ய வீரர் முன்னிலை பெற்றார். இந்நிலையில் ரவிக்குமார் தஹியாவுக்கான ஆடவர் மல்யுத்தத்தின் இறுதிப்போட்டி இன்று தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் ரஷ்யாவின் சாவூர் உகுயேவை எதிர்த்து அவர் போட்டியிட்டார். மொத்தம் 6 நிமிடங்கள் போட்டி நடைபெறும். அதன்படி ஆட்டத்தின் தொடக்கத்தில் இரு வீரர்களும் ஆக்ரோஷமாக செயல்பட்டனர். இதனால் முதல் 30 விநாடிகளுக்கு ஒரு புள்ளிகள் கூட கிடைக்கவில்லை. ஆனால் இதன் பின்னர் ரஷ்ய வீரரின் கையே ஓங்கி இருந்தது. இதனால் முதல் சுற்றில் 2 - 4 என்ற கணக்கில் ரஷ்ய வீரர் முன்னிலை பெற்றார்.

 போராடி தோல்வி

போராடி தோல்வி

2வது சுற்றில் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மேலும் ஒரு புள்ளியை இழந்தார் ரவிக்குமார். இதனால் ஆட்டம் 5 - 2 என்ற சூழலுக்கு சென்றது. பின்னர் சுதாரித்துக்கொண்ட ரவி, 2 புள்ளிகளை டெக்னிக்கல் முறையில் கைப்பற்றினார். ஆனால் அது வெற்றிக்கு போதுமானதாக இல்லை. கடைசி சில நிமிடங்களில் ரஷ்ய வீரர் 2 புள்ளிகளை எடுத்து 7 - 4 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றார்.

வெள்ளிப்பதக்கம்

வெள்ளிப்பதக்கம்

இறுதிப்போட்டியி தோல்வியை தழுவியிருந்தாலும், ரவிக்குமார் தஹியாவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது. இதனையடுத்து இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்கில் மீராபாய் சானுவுக்கு அடுத்ததாக வெள்ளிப்பதக்கம் வென்ற இந்தியர் ரவிக்குமார் தஹியாவே ஆகும். இவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Story first published: Thursday, August 5, 2021, 17:26 [IST]
Other articles published on Aug 5, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+