Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"பெல்ப்ஸ்" கொஞ்சம் ஓரமா போங்க.. 200மீ நீச்சலில் மீண்டும் ரெக்கார்ட் படைத்த கிறிஸ்டோப் மாலிக்.. சாதனை

டோக்கியோ: 200மீ நீச்சல் போட்டியில் ஹங்கேரி வீரர் கிறிஸ்டோப் மாலிக் புதிய ஒலிம்பிக் ரெக்கார்ட் படைத்துள்ளார். 1 நிமிடம் 51.25 நொடிகளில் 200 மீ நீச்சல் இலக்கை அடைந்து கிறிஸ்டோப் மாலிக் சாதனை படைத்துள்ளார்.

ஒலிம்பிக் நீச்சல் போட்டிகளில் உலகிலேயே தலை சிறந்த ஜாம்பவான் என்றால் அது அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ்தான். ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டிகளில் 28 வென்ற ஒரே வீரர் என்ற பெருமை இவருக்கு உண்டு. 13 தனிப்பட்ட தங்க பதக்கம் உட்பட 23 தங்க பதக்கம் வென்ற ஒரே வீரர் என்ற பெருமை இவருக்கு உண்டு.

2016ல் இவர் ஓய்வு பெற்ற பின் நீச்சல் விளையாட்டு உலகமே களையிழந்தது. இவரை போல இன்னொரு தலை சிறந்த வீரர் வர மாட்டாரா என்று உலக நாடுகள் ஏங்கியது. பெல்ப்ஸ் விட்டு சென்ற அந்த இடத்தைதான் தற்போது ஹங்கேரியின் கிறிஸ்டோப் மாலிக் பிடித்துள்ளார்.

வல்லவன்

வல்லவன்

வல்லவனுக்கும் ஒரு வல்லவன் வருவான் என்பது போல 2019லேயே பெல்ப்ஸின் உலக சாதனையை கிறிஸ்டோப் மாலிக் முறியடித்துவிட்டார். பெல்ப்ஸ் ஓய்வு பெற்ற இரண்டே வருடத்தில் மாலிக் இந்த சாதனையை படைத்தார். 200 மீட்டரில் பெல்ப்ஸ் 1:51.51 என்ற ரெக்கார்ட் டைம் வைத்து இருந்தார். 2009ல் நிகழ்த்தப்பட்ட இந்த சாதனையை 10 வருடமாக ஒருவரும் முறியடிக்கவில்லை. ஆனால் இதில் 2019 உலக நீச்சல் சாம்பியன்ஷிப்பில் கிறிஸ்டோப் மாலிக் முறியடித்தார்.

புதிய சாதனை

புதிய சாதனை

200மீ நீச்சல் போட்டியயை 1:50.73 நிமிடங்களில் நிறைவு செய்து மாலிக் இந்திய புதிய உலக சாதனை படைத்தார். அதாவது பெல்ப்ஸை விட 0.78 நொடிகள் வேகமாக நீச்சல் அடித்து மாலிக் நீச்சல் உலகை திரும்பி பார்க்க வைத்தார். அப்போதே பெல்ப்ஸின் இடத்தை நிரப்ப போகும் வீரர் இவர்தான் என்று உலக நாடுகள் கணிக்க தொடங்கியது.

ஒலிம்பிக்

ஒலிம்பிக்

கணித்தது போலவே தற்போது ஒலிம்பிக்கில் 200மீ நீச்சல் போட்டியில் ஹங்கேரி வீரர் கிறிஸ்டோப் மாலிக் புதிய ஒலிம்பிக் ரெக்கார்ட் படைத்துள்ளார். 1: 51.25 நிமிடங்களில் 200 மீ நீச்சல் இலக்கை அடைந்து கிறிஸ்டோப் மாலிக் சாதனை படைத்துள்ளார். ஒலிம்பிக்கில் பெல்ப்ஸ் ரெக்கார்ட் 1:52.03தான். அதையும் முறியடித்துள்ளார்.

எப்படி

எப்படி

இன்று 0.52 நொடிகள் முன்னதாக வந்து இருந்தால் தன்னுடைய உலக ரெக்கார்டான 1:50.73 நிமிட ரெக்கார்டை முறியடித்து இருப்பார். ஆனால் இன்று மாலிக்கின் உள்ளாடை லேசாக கிழிந்த காரணத்தால் அவரால் தன்னுடைய ரெக்கார்டை முறியடிக்க முடியவில்லை. ஆனாலும் புதிய உலக ரெக்கார்ட் படைத்ததோடு, ஹங்கேரிக்கா தங்க பதக்கமும் வாங்கி கொடுத்துள்ளார்.

Story first published: Wednesday, July 28, 2021, 16:49 [IST]
Other articles published on Jul 28, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+