Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒலிம்பிக்: முதல் நாள் முடிவடைந்தது.. இந்தியாவுக்கு எத்தனை பதக்கங்கள்? சாதகமா சறுக்கலா?- முழு விவரம்

ஜப்பான்: டோக்கியோ ஒலிம்பிக்கின் முதல் நாளான இன்று இந்திய அணிக்கான போட்டிகள் அனைத்து நிறைவடைந்தன.

டோக்கியோ ஒலிம்பிக்கின் முதல் நாள் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று மொத்தம் 11 தங்கப்பதக்கங்களுக்கான போட்டிகள் நடைபெறுகிறது.

இதில் இந்திய அணியின் வெற்றிகள் எத்தனை, பதக்கங்கள் எத்தனை என்பனவற்றை காணலாம்.

தொடக்கம்

தொடக்கம்

இன்று முதன் முதலாக நடந்த பதக்க போட்டியான, துப்பாக்கி சுடுதலில் பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் போட்டியில், இந்தியாவின் இளவேனில் வாலறிவன் மற்றும் அபூர்வி சண்டேலா ஆகியோர் கலந்துக்கொண்டனர். ஆனால் இவர்கள் இருவருமே இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தனர்.

துப்பாக்கி சுடுதல் போட்டி

துப்பாக்கி சுடுதல் போட்டி

ஆண்களுக்கான 10 மீ ஏர் பிஸ்டல் தகுதிச் சுற்றுப் போட்டிகள் இன்று நடைபெற்றன. இதில், உலகின் நம்பர்.1 வீரரான அபிஷேக் வெர்மா மற்றும் உலகின் நம்பர்.2 வீரரான சவுரப் சவுத்ரி ஆகியோர் பங்கேற்றனர். இதில், அபிஷேக் மொத்தமாகவே 575 புள்ளிகள் பெற்றதால் இறுதிப் போட்டிக்கு முன்னேறவில்லை. ஆனால், இரண்டாம் நிலை வீரரான சவுரப் சவுத்ரி சிறப்பான ஷாட்களை வெளிப்படுத்தினார். இதனால் மொத்தமாக 586 புள்ளிகளை எடுத்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். எனினும் இறுதிப் போட்டியில் அவர் 137.4 புள்ளிகள் மட்டும் பெற்று, ஏழாவது இடத்தையே பிடித்து பதக்கம் எதுவும் இன்றி வெளியேறினார்.

வில்வித்தை போட்டி

வில்வித்தை போட்டி

வில்வித்தை போட்டியில் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் பிரவீன் ஜாதவ் - தீபிகா குமாரி இணை காலிறுதிக்கு முன்னேறியது. லீக் சுற்றில், சீன அணியை எதிர்கொண்ட இந்த ஜோடி 5 - 3 என்ற கணக்கில் வென்றது. பின்னர் பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் காலிறுதிப் போட்டி தொடங்கியது. இதில், கொரிய அணியுடன் இந்தியா மோதியது. ஆனால், 2- 6 என்ற கணக்கில் தீபிகா - பிரவீன் ஜோடி தோற்று வெளியேறியது. இதன் மூலம், வில்வித்தை விளையாட்டின் கலப்பு இரட்டையர் பிரிவு மெடல் கனவு முடிவுக்கு வந்தது.

இந்திய ஹாக்கி அணி

இந்திய ஹாக்கி அணி

இன்று காலை நடந்த ஹாக்கி போட்டி, ஆண்கள் பிரிவில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் வெற்றிப் பெற்றது. இதன் மூலம் நாளை நடைபெறும் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது. இதே போல இன்று மாலை நடைபெற்ற மகளிர் ஹாக்கி போட்டியில் இந்தியா - நெதர்லாந்து அணிகள் மோதின. இதில் இந்திய அணி 5 - 1 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறியது.

ஒரே ஒரு வீரர்

ஒரே ஒரு வீரர்

இன்று நடைபெற்ற ஜுடோ போட்டியில் இந்தியாவின் சார்பில் பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவில், சுஷிலா தேவி - ஹங்கேரியின் எவா செர்னோ விக்கி ஆகியோர் மோதினர். இந்தியா சார்பில் ஜுடோ விளையாட்டில் கலந்து கொண்ட ஒரே போட்டியாளர் சுஷிலா மட்டும் தான். ஆனால், எவாவிடம் அவர் தோற்று வெளியேறினார்.

டேபிள் டென்னிஸ் போட்டி

டேபிள் டென்னிஸ் போட்டி

டேபிள் டென்னிஸ் விளையாட்டில், கலப்பு இரட்டையர் பிரிவில் மனிகா பத்ரா- சரத்கமல் ஆகியோர் பங்கேற்றனர். சீன தைபேயின் லின் யன் ஜூ-செங்கு ஜிங்குவுடன் இவர்கள் மோதினர். இதில், 8-11, 6-11, 5-11, 4-11 என்ற நேர் செட்டில் தோல்வி அடைந்து வெளியேறியது இந்திய இணை.

குத்துச்சண்டை போட்டி

குத்துச்சண்டை போட்டி

ஆண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் விகாஷ் கிஷண் 69 கிலோ எடை பிரிவில் ஜாப்பானின் குயுன்சி செவான்ரெட்ஸ் ஒகாசாவாவை எதிர்த்து போட்டியிட்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய வீரர் விகாஸ் கிஷான் 10 -9, 10-9, 10-8 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தார்.

வெள்ளிப்பதக்கம்

வெள்ளிப்பதக்கம்

இந்தியாவுக்கு இன்று நடந்த ஆறுதலான சம்பவம் மீராபாய் வென்று கொடுத்த வெள்ளிப்பதக்கம் தான். மகளிர் பளு தூக்குதல் போட்டியில் 49கி பிரிவில் போட்டியிட்ட அவர், மொத்தமா ஸ்நாட்ச் பிரிவில் இவர் 87 கிலோவும் க்ளீன் அண்டு ஜெர்க் முறையில் 115 கிலோ தூக்கி அசத்தினார். இதன் மூலம் மொத்தம் மொத்தமாக 202 கிலோ எடையை தூக்கி வெள்ளிப்பதக்கம் வென்றார். டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம் இதுவாகும். இதுமட்டுமல்லாமல் ஒலிம்பிக் வரலாற்றில் பளு தூக்குதல் போட்டியில் இந்தியா பெறும் 2வடு பதக்கம் இதுவாகும். நாளைய போட்டியிலாவது இந்தியா பதக்கங்களை குவிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Story first published: Saturday, July 24, 2021, 21:13 [IST]
Other articles published on Jul 24, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+