For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Tokyo Olympics: மெடல்கள் இன்று குவிய வாய்ப்பு.. பிவி சிந்து, அட்டானு தாஸ் தலைப்பு செய்தியாகலாம்

ஜப்பான்: டோக்கியோ ஒலிம்பிக் தொடரின் ஒன்பதாவது நாளான இன்று இந்தியா விளையாடும் போட்டிகள் குறித்து பார்க்கலாம்.

Recommended Video

PV Sindhu loses to Tai Tzu Ying in semi final! | Tokyo Olympics | OneIndia Tamil

டோக்கியோ ஒலிம்பிக்கில், இப்போது தான் இந்தியா பக்கம் காற்று வீசத் தொடங்கி இருக்கிறது. இந்திய பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்று சில நாட்கள் கழித்து இப்போது 2 மெடல் உறுதியாகி இருக்கிறது.

குத்துச்சண்டை பிரிவில் லோவ்லினா மற்றும் பேட்மிண்டன் பிரிவில் பி.வி.சிந்து ஆகியோர் அரையிறுதி போட்டிக்கு முன்னேறி, தங்களின் வெண்கலப்பதக்கத்தை உறுதி செய்துள்ளனர்.

Tokyo Olympics 2021 PV Sindhu, Atanu Das headline for India Day 9 schedule

இந்த நிலையில், 9வது நாளான இன்று முக்கியமான போட்டிகள் இந்தியாவுக்கு அணிவகுத்து காத்திருக்கின்றன.

கோல்ஃப் : ஆண்களின் தனிநபர் ஸ்ட்ரோக் சுற்றில் அனிர்பன் லஹிரி மற்றும் உதயன் மானே ஆகியோர் சுற்று 3 இல் களமிறங்குகின்றனர். இன்று அதிகாலை 4 மணிக்கு இந்த போட்டி தொடங்கியது.

குதிரையேற்றம்: Dressage அணி மற்றும் தனிநபர் நாள் 2 - காலை 5 மணிக்கு 3வது அமர்வு தொடங்கியது. இதில், இந்தியா சார்பில் Fouaad Mirza பங்கேற்றுள்ளார்.

தடகளப் போட்டி: பெண்கள் வட்டு எறிதலில் சீமா புனியா, ஏ குரூப்பில் இன்று காலை 6:00 மணிக்கு தனது ஆட்டத்தை துவக்கினார். தற்போது இந்த போட்டி நடைபெற்று வருகிறது.

வில்வித்தை: அட்டானு தாஸ் Vs டி. ஃபுருகாவா (ஜப்பான்) ஆண்கள் தனிநபர் காலிறுதி ஆட்டம். காலை 7:16 மணிக்கு

தடகளம்: கமல்பிரீத் கவுர் பெண்கள் வட்டு எறிதல், குரூப் பி, காலை 7:25 மணிக்கு

குத்துச்சண்டை: அமித் பங்கல் vs ஒய். மார்டினெஸ் (கொலம்பியா) ஆண்கள் ஃப்ளை (48-52 கிலோ) சுற்று 16 காலை 7:30 மணிக்கு

துப்பாக்கிச் சுடுதல்: தேஜஸ்வினி சாவந்த், அஞ்சும் மவுட்கில். 50 மீ ரைபிள் 3 qualifications. காலை 8:30 மணி

Sailing: கணபதி கெளபாண்டா, வருண் தக்கார் 49er ரேஸ் 10. காலை 8:35 மணி

பெண்கள் ஹாக்கி: இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டி. இதில் இந்திய அணி கண்டிப்பாக வெற்றிப்பெற்றே ஆக வேண்டும். காலை 8:45 மணி

வில்வித்தை: அட்டானு தாஸ். ஆண்கள் தனிநபர் அரையிறுதிப் போட்டி (தகுதிப் பெற்றால்) காலை 11:15 மணி.

துப்பாக்கிச் சுடுதல்: தேஜஸ்வினி சாவந்த், அஞ்சும் மவுட்கில் 50 மீ ரைபிள் 3 பைனல் (தகுதிப் பெற்றால்) மதியம் 12:30 மணி

வில்வித்தை: அட்டானு தாஸ் ஆண்கள் தனிநபர் பதக்க சுற்றுகளில் (தகுதிப் பெற்றால்) மதியம் 1:00 மணி

பேட்மிண்டன்: பிவி சிந்து vs தாய் சூ யிங் (சீன தைபே) பெண்கள் ஒற்றையர் அரையிறுதிப் போட்டி. பிற்பகல் 2:30 மணி

குத்துச்சண்டை: Women's Middle (69-75kg) பூஜா ராணி Vs லி கியான் காலிறுதிப் போட்டி 4. மாலை 3:36 மணிக்கு

தடகளம்: மாலை 3.40 மணிக்கு ஆண்கள் நீளம் தாண்டுதல். இந்தியா சார்பில் எம். ஸ்ரீசங்கர் கலந்து கொள்கிறார்.

ஒட்டுமொத்தமாக பார்த்தோமெனில், இன்று பல முக்கிய மெடல்களுக்கான போட்டிகள் நடைபெறுகிறது. பி.வி. சிந்து வெற்றிப் பெற்றால் வெள்ளிப்பதக்கம் உறுதியாகிவிடும். பூஜா ராணி வெற்றிப் பெற்றால், வெண்கலப்பதக்கம் உறுதியாகிவிடும். இது இந்தியாவின் 4வது பதக்கமாக அணிவகுக்கும். வில்வித்தையில் அட்டானு தாஸ் வெற்றிப் பெற்றால், வெண்கலப்பதக்கம் அல்லது வெள்ளிப்பதக்கம் உறுதியாகிவிடும். இந்தியாவுக்கு இன்று நல்ல நேரம் இருந்தால், நிச்சயம் மெடல்கள் அணிவகுக்கலாம். பொறுத்திருந்து பார்ப்போம்!

Story first published: Saturday, July 31, 2021, 9:52 [IST]
Other articles published on Jul 31, 2021
English summary
Tokyo Olympics 2021 India Day 9 schedule - ஒலிம்பிக்ஸ்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+