நீச்சல் போட்டிகள் முடிந்தது... ஒரே தொடரில் 7 பதக்கங்கள்... எம்மா மெக்கான் புது ரெக்கார்ட்!
ஜப்பான்: டோக்கியோ ஒலிம்பிக்கில் 2 தங்கப்பதக்கங்கள் உட்பட 7 பதக்கங்களை வென்று ஆஸ்திரேலிய வீராங்கனை அசத்தியுள்ளார்.
கடந்த ஜூலை 23ம் தேதி தொடங்கிய டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு பிரிவுகளிலும் பதக்கத்திற்கான இறுதிப்போட்டிகள் நிறைவடைந்து வருகின்றன.
அந்தவகையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளது. இந்த போட்டியில் சாதனை படைத்துள்ளார் ஆஸ்திரேலிய வீராங்கனை எம்மா மெக்கான்.

கடைசிப்போட்டிகள்
நீச்சல் பிரிவில் கடைசி கட்ட போட்டி இன்று நடைபெற்றது. மகளிருக்கான 50மீ ஃப்ரீ ஸ்டைல் போட்டியில் எம்மா மெக்கான் முதலிடத்தை பிடித்து தங்கம் வென்றுள்ளார். ஸ்வீடன் வீராங்கனை சாரா ஜோஸ்ட்ரோம் வெள்ளிப்பதக்கமும், டென்மார்க் வீராங்கனை வெண்கலமும் வென்றனர்.

4வது தங்கம்
இந்த ஒலிம்பிக்கில் எம்மா மெக்காம் பெறும் 4வது தங்கப்பதக்கம் இதுவாகும். இதற்கு முன்னர் நடைபெற்ற வேறு பிரிவு போட்டிகளில் 3 தங்கப்பதக்கத்தை வென்றிருந்தார். 4 தங்கம் மட்டுமின்றி 3 வெண்கலம் என மொத்தமாக இந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் அவர் கலந்துக்கொண்ட 7 போட்டிகளிலும் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

7 பதக்கம்
27 வயதாகும் அவர் ஒரே தொடரில் 7 பதக்கங்களை வென்ற முதல் நீச்சல் வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார். இதற்கு முன்னர் ஆடவர் நீச்சல் போட்டிகளில் தான் மைக்கேல் பெல்ஹ்ப்ஸ், மார்க் ஸ்பிட்ஸ், மாட் பியாண்டி ஆகியோர் பெற்றிருந்தனர். இதனால் ஒலிம்பிக்கில் புதிய ரெக்கார்டை அவர் படைத்திருக்கிறார்.

முதல் முறை
இதுமட்டுமல்லாமல் டோக்கியோ ஒலிம்பிக்கில் மெக்கான் பெற்ற 7வது பதக்கத்தின் காரணமாக, நீச்சல் போட்டியில் ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய அணியின் பதக்க எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. இதனால் டோக்கியோ ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் அதிக பதக்கங்களை வென்ற பட்டியலில் ஆஸ்திரேலியா 2வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 1956ம் ஆண்டுக்கு பின்னர் ஆஸ்திரேலியா இவ்வளவு அதிக பதக்கத்தை நீச்சல் போட்டியில் பெறுவது இதுவே முதல்முறை.

முதலிடம்
முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது. மொத்தம் 30 பிரிவுகளில் நடைபெற்ற இந்த நீச்சல் போட்டிகளில் அமெரிக்கா 8 தங்கம், 9 வெள்ளி மற்றும் 9 வெண்கலம் என 26 பதக்கங்களை வென்றுள்ளது. அதிகபட்சமாக காலெப் டிரஸ்ஸல் 5 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.


Click it and Unblock the Notifications