Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜஸ்ட் மிஸ்.. பரபரப்பாக நடைபெற்ற குத்துச்சண்டை.. இறுதிவரை போராட்டம்..தோல்வி பெற்ற இந்திய வீரர் விகாஸ்

ஜப்பான்: ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் விகாஸ் கிஷான் ஏமாற்றமளித்துள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று மொத்தம் 11 தங்கப்பதக்கங்களுக்கான போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஆண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் நட்சத்திர வீரர் விகாஸ் கிருஷ்ணன் தோல்வியை சந்தித்துள்ளார்.

குத்துச்சண்டை போட்டி

குத்துச்சண்டை போட்டி

டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை இந்தியாவில் இருந்து இந்தாண்டு முதல் ஆளாக விகாஸ் கிஷண் அரங்கேறினார். 69 கிலோ எடை பிரிவில் கலந்துக்கொண்ட அவர், ஜாப்பானின் குயுன்சி செவான்ரெட்ஸ் ஒகாசாவாவை எதிர்கொண்டார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஜப்பானிய வீரரின் கையே ஓங்கி இருந்தது.

தோல்வி

தோல்வி

விகாஸ் கிஷண் சிறப்பாக விளையாடிய போதிலும் அவரின் பஞ்ச்-கள் ஒகாசாவாவிடம் பயனளிக்கவில்லை. இதனால் முதல் சுற்றில் ஒகாசாவா 10 - 9 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றார். 2வது சுற்றில் சீறுகொண்டு எழுந்து விகாஸ் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்தினார் எனினும் அவரால் சரிவில் இருந்து மீள முடியவில்லை. இதனால் 2வது மற்றும் 3வது சுற்றில் 10 - 9, 10 - 8 என்ற புள்ளிக்கணக்கில் ஜப்பான் வீரர் ஒசாகாவா வெற்றி பெற்றார். இதன் மூலம் விகாஸ் கிஷண் டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறினார்.

நம்பிக்கை பொய்யானது

நம்பிக்கை பொய்யானது

29 வயதாகும் விகாஷ் கிஷண் ஒலிம்பிக் பதக்கத்தை தவிர கிட்டத்தட்ட அனைத்து பதக்கங்களையும் கையில் வைத்துள்ளார். உலக சாம்பியன் பட்டமும் அவர் வென்றுவிட்டார். இந்த முறை நிச்சயம் ஒலிம்பிக் பதக்கத்தை வென்றுவிடுவார் என நம்பிக்கையுடன் இருந்த நிலையில் ஏமாற்றத்தை சந்தித்துள்ளார்.

இந்தியாவுக்கு ஆறுதல்

இந்தியாவுக்கு ஆறுதல்

இன்றைய நாளில், வில்வித்தை, துப்பாக்கி சுடுதல், டேபிள் டென்னிஸ், குத்துச்சண்டை ஆகிய போட்டிகளில் இந்திய அணி ஏமாற்றத்தை சந்தித்துள்ளது. எனினும் ஹாக்கி போட்டியில் நியூசிலாந்து அணியை இந்திய ஆண்கள் அணி வீழ்த்தியது மற்றொரு தருணங்களாக அமைந்தது. இதுமட்டுமல்லாமல் பளுதூக்குதலில் வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்று இந்தியாவின் பதக்க வேட்டையை தொடக்கி வைத்துள்ளது ஆறுதலாக அமைந்துள்ளது.

Story first published: Saturday, July 24, 2021, 21:14 [IST]
Other articles published on Jul 24, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+