Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒலிம்பிக் 2020: கண்டிப்பா அத செய்யனும்..இல்லைனா! இந்தியா உள்ளிட்ட 6 நாடுகளுக்கு மட்டும் புதிய விதி!

டோக்கியோ: ஒலிம்பிக்கில் பங்குபெற இந்தியா உள்ளிட்ட 6 நாடுகளுக்கு மட்டும் புதிய விதிமுறையை அறிவித்துள்ளது ஜப்பான் அரசு.

ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் ஜூலை 23ம் தேதி முதல் ஆகஸ்ட் 8ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

கடந்த முறை கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டு தற்போது இந்த போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஒலிம்பிக் 2020

ஒலிம்பிக் 2020

உலகின் மிகப்பெரும் கிரிக்கெட் திருவிழாவாக பார்க்கப்படும் ஒலிம்பிக் போட்டிகள் கடந்தாண்டு கொரோனா காரணமாக நடைபெறாமல் போனது. இந்தாண்டு புதுவகை கொரோனாவுக்கு மத்தியிலும் டோக்கியோவில் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பார்வையாளர்களுக்கு மட்டுமே ஜப்பான் அரசு அனுமதி வழங்கியுள்ளது.

கொரோனா வைரஸ் விதிமுறை

கொரோனா வைரஸ் விதிமுறை

ஒலிம்பிக்கில் பங்குபெறும் வீரர், வீராங்கனைகளுக்கும் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் அறிவிக்கப்பட்டிருந்தன. அதன்படி அனைத்து நாடுகளை சேர்ந்த வீரர்களும் டோக்கியோவிற்கு கிளம்புவதற்கு 4 நாட்களுக்கு முன்னதாக 2 முறை கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும், அதில் நெகட்டீவ் என முடிவு வந்தால் மட்டுமே கலந்துக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய விதி

புதிய விதி

இந்நிலையில் டெல்டா என்றழைக்கப்படும் புதிய வகை கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் அதிகமாக உள்ள நாடுகளான இந்தியா, இலங்கை ஆஃப்கானிஸ்தான், நேபால், மாலத்தீவு, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு புதிய விதிமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட நாடுகளை சேர்ந்த வீரர்கள், டோக்கியோவிற்கு புறப்படுவதற்கு 7 நாட்களுக்கு முன்னதாக தினந்தோறும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அதில் நெகட்டீவ் என வந்தால் மட்டுமே ஒலிம்பிக்கில் கலந்துக்கொள்ள முடியும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் இருந்து தற்போது வரை 107 வீரர் மற்றும் வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டிகளுக்காக தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் 7 நாட்கள் தொடர் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. இந்தியாவில் டெல்டா ப்ளஸ் கொரோனா வைரஸ் வேகமெடுக்கும் எனக்கூறப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, June 29, 2021, 16:06 [IST]
Other articles published on Jun 29, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+