For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய குழுவின் கம்பீர அணிவகுப்பு.. உற்சாகப்படுத்திய பிரதமர் மோடி.. இணையத்தை கலக்கும் புகைப்படம்!

டெல்லி: ஒலிம்பிக்கில் கலந்துக்கொண்டுள்ள இந்திய வீரர்களுக்களுக்காக பிரதமர் நரேந்திர மோடி உற்சாகப்படுத்திய புகைப்படம் வைரலாகி வருகிறது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் இன்று வான வேடிக்கைகளுடன் தொடங்கியது.

டோக்கியோ தேசிய மைதானத்தில் இந்த நிகழ்ச்சிகள் ரசிகர்களின் எந்தவித ஆரவாரமும் இன்றி நடைபெற்றது.

Tokyo Olympics: PM Modi Cheers Indian Contingent at Tokyo Olympics Opening Ceremony

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் மிகுந்த பாதுகாப்புடன் நடைபெறும் இந்த ஒலிம்பிக் போட்டிகளில் 205 நாடுகள் கலந்து கொள்கிறது. இந்த முறை மொத்தம் மொத்தம் 11,326 வீரர்கள் 339 போட்டிகளில் கலந்து கொள்கிறார்கள். இதனால் 339 தங்க பதக்கங்கள் இந்த தொடரில் வழங்கப்படவுள்ளது.

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இதுவரை இல்லாத வகையில் இந்தியாவில் இருந்து 288 பேர் கொண்ட மிகப்பெரும் குழு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்தியா சார்பில் மொத்தம் 127 வீரர், வீராங்கனைகள் 18 விளையாட்டு பிரிவுகளின் கீழ் பங்கேற்கின்றனர். இந்நிலையில் இதில் பதக்கம் வெல்பவர்களுக்கு உலகில் எந்த நாட்டிலும் கிடைக்காத பெரும் பரிசுத் தொகைகள் கிடைக்கவுள்ளன.

ஒலிம்பிக் தொடக்க விழாவில் இந்தியாவின் சார்பில் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் மற்றும் இந்திய ஹாக்கி அணி கேப்டன் மண்ப்ரீத் சிங் ஆகியோர் தேசிய கொடியை ஏந்தி அணிவகுப்பு நடத்தினர். இந்நிலையில் இந்திய குழு அணி வகுப்பு நடத்தியபோது அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி, தனது அலுவலகத்தில் தொலைக்காட்சியை பார்த்து எழுந்து நின்று கைத்தட்டினார். இந்த புகைப்படத்தை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், இந்திய வீரர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Story first published: Friday, July 23, 2021, 20:26 [IST]
Other articles published on Jul 23, 2021
English summary
PM Modi Cheers Indian Contingent at Tokyo Olympics Opening Ceremony, Picture goes Viral
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X