சேப்பாக்கத்தில் ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் : உணவு பொருட்கள், தண்ணீர் பாட்டில்களுக்கு தடை

உலககோப்பை கிரிக்கெட் போட்டிகள் நாளை மறுநாள் துவங்குகின்றன. இதில் சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் 4 போட்டிகள் நடக்கின்றன.
போட்டிகள் விவரம் வருமாறு,
நியூசிலாந்து-கென்யா (20-ம் தேதி, காலை 9.30 மணி),
இங்கிலாந்து-தென் ஆப்பிரிக்கா (மார்ச்-6, காலை 9.30 மணி),
இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் (மார்ச் 17, பிற்பகல் 2.30 மணி),
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் (மார்ச் 20, பிற்பகல் 2.30 மணி)
இந்தப் போட்டிகளைக் காண வரும் ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மைதானத்திற்குள் உணவு பொருட்கள், தண்ணீர் பாட்டில்கள் கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தடை தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் கே.எஸ். விஸ்வநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
கண்ணாடி பாட்டில்கள், குளிர்பானம் மற்றும் மதுபானம் அடங்கிய பாட்டில்கள், கத்திகள், வாண வேடிக்கைகள், வெடி பொருட்கள், தீப்பற்றக்கூடிய பொருட்கள் சிகரெட் லைட்டர்கள் மற்றும் தீப்பெட்டிகள், உருட்டுக்கட்டை, தீப்பந்தம், காற்று ஒலிப்பான், புகைகுண்டு மற்றும் கொடிக் கம்புகள், மதுபானங்கள் மற்றும் போதைப் பொருட்கள் (பதிவு செய்யப்பட்ட மருத்துவ அதிகாரி பரிந்துரைக்கப்பட்ட பொருட்கள் தவிர்த்து), அரங்கத்தின் வெளியே தயாரித்த உணவுப்பொருட்கள், பிராணிகள். பேனர்கள், விளம்பர தட்டிகள், துண்டு பிரசுரங்கள், சின்னங்கள் அல்லது இதர பொருட்கள், உபகரணங்கள் அல்லது அரசியல், மதம் மற்றும் சாதி தொடர்பாக கடுமையான வார்த்தைகள் பயன்படுத்தி எழுதப்பட்ட விளம்பரங்கள், கோஷங்கள் அல்லது உருவங்கள் அல்லது வியாபாரம் தொடர்பான விளம்பரங்கள் மற்றும் செய்திகள், எல்லா வகையான புகைப்பட தாங்கிகள் அல்லது ஒளிப்பதிவு கருவிகள் (தனிப்பட்ட உபயோகத்திற்காகவோ அல்லது வேறு எவ்விதமான உபயோகத்திற்காகவோ).
எவ்வகையான கேமரா அல்லது பிறவிதமான புகைப்படம் எடுக்கக்கூடிய அல்லது ஒலிப்பதிவு செய்யக்கூடிய கருவிகள் (எப்படிப்பட்ட வகைகளாக இருந்தாலும் நிழற்படம் அல்லது நகரக் கூடியதை பதிவு செய்யும் கருவியாக இருந்தாலும்)- பொழுதுபோக்கு மற்றும் தனிப்பட்ட வியாபாரம் நோக்கமற்ற உபயோகம் தவிர்த்து, தலைக்கவசம், பைகள், தண்ணீர் பொட்டலங்கள்.
மேற்கண்ட பொருட்கள் அனைத்தும் மைதானத்திற்குள் கொண்டு வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று அதில் கூறியிருந்தது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:44 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications