For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் டாப் 100 பணக்கார விளையாட்டு வீரர்கள்.. ஒரே கிரிக்கெட் வீரர் விராட் கோலி.. இத்தனை கோடியா?

பெங்களூரு: கடந்த 12 மாதங்களில் அதிக பணம் சம்பாரித்த உலகின் டாப் 100 விளையாட்டு வீரர்கள் குறித்து ஸ்போர்டிகோ என்ற விளையாட்டு வணிகம் தொடர்பான பத்திரிகை பட்டியல் வெளியிட்டுள்ளது.

இதில் ஒவ்வொரு விளையாட்டிலும் எந்த வீரர் யார் பணக்காரர் என்ற பட்டியலும், ஒட்டுமொத்தமாக 100 வீரர் என்ற பட்டியலையும் வெளியிட்டுள்ளது.

இதில் வருமானத்தில் கடந்த 12 மாதத்தில் வீரர்கள் பெற்ற சம்பளம், விளம்பரம் மூலம் பெற்ற தொகை வைத்து பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

டாப் 3 வீரர்கள்

டாப் 3 வீரர்கள்

இதில் உலகின் முதல் பணக்கார விளையாட்டு வீரர் என்ற பெருமையை கூடைப்பந்து ஆட்டத்தின் லிப்ரான் ஜேம்ஸ் பெற்றுள்ளார். இவர் கடந்த 12 மாதத்தில் 974 கோடி ரூபாயை ஈட்டியுள்ளார். 2வது இடத்தை கால்பந்து வீரர் மெஸ்ஸி பிடித்துள்ளார். அவர் கடந்த 12 மாதத்தில் 943 கோடியை ஈட்டியுள்ளார். 889 கோடி ரூபாயுடன் கிறிஸ்டியானோ ரொனால்டோ 3வது இடத்தை பிடித்துள்ளார்.

ரோஜர் ஃபெடரர்

ரோஜர் ஃபெடரர்

4வது இடத்தை கால்பந்து வீரர் நெய்மார் பிடித்துள்ளார். அவர் 796 கோடி ரூபாயை ஈட்டியுள்ளார். 5வது இடத்தை குத்துச்சண்டை வீரர் கேனிலோ அல்வெர்ஸ் பெற்றுள்ளார். டென்னிஸ் விளையாட்டில் இன்னும் நம்பர் 1 பணக்கார விளையாட்டு வீரராக சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் உள்ளார். இவர் கடந்த 12 மாதத்தில் விம்பிள்டனை தவிர பெரிய தொடரில் களமிறங்காத நிலையில் 657 கோடி ரூபாயை சம்பாரித்துள்ளார்.

பணக்கார மகளிர் வீராங்கனை

பணக்கார மகளிர் வீராங்கனை

கோல்ஃப் விளையாட்டில் எப்போதும் போல் டைகர் வுட்ஸ், முதல் இடத்திலும் ஒட்டுமொத்தமாக 10வது இடத்தையும் பிடித்துள்ளார், இவர் 568 கோடியை சம்பாரித்துள்ளார். மகளிர் விளையாட்டு வீராங்கனை பிரிவில் ஜப்பான் வீராங்கனை ஒசாகா 411 கோடி ரூபாயும், செரினா வில்லியம்ஸ் 401 கோடி ரூபாயுடன் 2வது இடத்திலும் உள்ளனர்.

விராட் கோலி

விராட் கோலி

பார்முலா ஓன் விளையாட்டில் 417 கோடி ரூபாயுடன் லீவிஸ் ஹாமில்டன் முதலிடத்தையும் ஓட்டுமொத்தமாக 19வது இடத்தையும் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் கிரிக்கெட் பிரிவில் நம்பர் 1 பணக்கார வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். இவர் கடந்த 12 மாதத்தில் 261 கோடி ரூபாயை வருமானமாக ஈட்டியுள்ளார். ஒட்டுமொத்த பிரிவில் கோலி 61வது இடத்தை பிடித்துள்ளார்.

Story first published: Wednesday, May 11, 2022, 19:31 [IST]
Other articles published on May 11, 2022
English summary
Top 100 Highest Paid athelete in 2022- Virat kohli is the only cricketer in the list உலகின் டாப் 100 பணக்கார விளையாட்டு வீரர்கள்.. ஒரே கிரிக்கெட் வீரர் விராட் கோலி.. இத்தனை கோடியா?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+