டான் தொலைக்காட்சி உரிமையாளர் கைது
சென்னை:
உரிமம் பெறாமல் திரைப் படங்களை வெளிநாடுகளில் திரையிட்ட டான் தொலைக்காட்சி உரிமையாளர் கைதுசெய்யப்பட்டார்.
இந்த நிறுவனம் தமிழ்நாட்டிலும், வெளி நாடுகளிலும் பல தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிவருகிறது. உரிமம் இல்லாமல் தமிழ்த் திரைப் படங்களையும் இந்த நிறுவனம் வெளிநாட்டுதொலைக்காட்சிகளுக்கு விற்று, ஒளிபரப்பி வந்தது.
இது தொடர்பாக திருட்டி விசிடி போலீசாரிடம் புகார்கள் குவிந்தன. இதையடுத்து போலீசார் டான் நிறுவனநிர்வாகிகளிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது உரிமம் இல்லாத திரைப் படங்களை இந்தியாவுக்குள்ஒளிப்பரப்பவில்லை. வெளி நாடுகளில் ஒளிபரப்பினோம் என்று ஒப்புக் கொண்டனர்.
இதையடுத்து அந்த நிறுவனத்துக்கு போலீசார் சீல் வைத்தனர். மேலும் அதன் உரிமையாளர் குலாம் உசேனைகைது செய்தனர்.
குகநாதன், மணிவேல் மெல்லோன், அருள் குமரன், ஆனந்த் கணேஷ், நிர்வாகி கபிலன் ஆகியோர்தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Story first published: Wednesday, December 7, 2011, 17:49 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications