For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

VIJAY - விளையாட்டு வீரராக தளபதி விஜய் நடித்த படங்கள்.. நீங்க எதிர்பார்க்காத படங்களும் இதில் இருக்கு!

சென்னை : தமிழ் சினிமாவில் உச்சபட்ச நடிகராக இருக்கும் விஜய் தற்போது அரசியல் கட்சியை தொடங்கியிருக்கிறார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஏற்கனவே தொடங்கியிருந்த நடிகர் விஜய் தற்போது கட்சியின் கொடியையும் வெளியிட்டு இருக்கிறார்.

மேலும் கோட் திரைப்படத்திற்கு பிறகு இன்னும் ஒரு படம்தான் நடிக்கப் போவதாகவும், அதன் பிறகு முழுக்க முழுக்க தீவிர அரசியலில் ஈடுபட போவதாகவும் விஜய் கூறியிருக்கிறார். இந்த நிலையில் நடிகர் விஜய் விளையாட்டு வீரராக நடித்து பிரபலமான படங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.

Vijay TVK

சினிமா நட்சத்திரங்கள் விளையாட்டை ஊக்குவிக்கும் விதமாக படங்களை நடிப்பதன் மூலம் அது அவர்களது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்க்கிறது. அந்த வகையில் நடிகர் விஜய் தனது பல படங்களில் விளையாட்டு வீரராக களம் இறங்கி இருக்கிறார். கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்தாமல் விஜய் பல விளையாட்டில் கவனம் செலுத்தும் வீரராக வந்திருக்கிறார்.அது குறித்து தற்போது பார்க்கலாம்.

இந்த பட்டியலில் முதலிடத்தில் பிடித்திருப்பது கில்லி.தமிழர்கள் மனதிலும் விளையாட்டிலும் பிரிக்க முடியாத ஒன்றாக கபடி இருக்கிறது. எனினும் 2000 ஆண்டு தொடக்கங்களில் கிரிக்கெட் உச்சத்தில் இருந்த நிலையில் விஜய் கபடி வீரராக களம் இறங்கி நடித்த கில்லி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. இன்றளவும் நடிகர் விஜய்யின் மறக்க முடியாத திரைப்படமாக கில்லி இருக்கின்றது.

இந்த பட்டியலில் 2வது இடத்தில் பிகில் இருக்கிறது. கிரிக்கெட் மட்டுமே நமது ரசிகர்கள் தீவிரமாக பார்த்த நிலையில் பிகில் படம் மூலம் கால்பந்து வீரராக நடிகர் விஜய் களமிறங்கினார். அது மட்டுமில்லாமல் மகளிர் கால்பந்து போட்டியை ஊக்குவிக்கும் விதமாக பிகில் திரைப்படம் அமைந்திருந்தது. கமர்சியலும் விளையாட்டும் கலந்து நடிகர் விஜய் நடித்த திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது.

மூன்றாவதாக இந்த பட்டியலில் இடம் பிடித்திருக்கும் திரைப்படம் அழகிய தமிழ் மகன். இதில் நடிகர் விஜய் ஓட்டப்பந்தய வீரராக களமிறங்குவார். ஓட்டப்பந்தயத்தில் கில்லியாக இருக்கும் நடிகர் விஜய் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கு பெற்று பதக்கங்களை வாங்கி இருப்பார். மேலும் வில்லன் விஜய் ஒரே உருவ ஒற்றுமையில் இருந்த போதும் உண்மையான விஜய் யார் என்பதை கண்டுபிடிக்க ஓட்டப்பந்தயத்தை வைத்து தான் நண்பர்கள் முடிவு செய்வார்கள்.

அந்த அளவுக்கு ஓட்டப்பந்தயம் என்ற விளையாட்டு படத்தின் மையப் பொருளாக அமைந்தது. இதேபோன்று இந்த பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்திருக்கும் திரைப்படம் பத்ரி. கல்லூரி மாணவனாக களம் இறங்கிய விஜய் தனது அண்ணனின் கனவை நிறைவேற்றி தனது தந்தையின் பாசத்தை மீட்பதற்காக கிக் பாக்ஸிங் போட்டியில் களமிறங்கி வெற்றி பெறுவார். கிக் பாக்ஸிங் என்றால் என்ன என்று தெரியாமல் இருந்த ரசிகர்களுக்கு பத்ரி திரைப்படம் புது அனுபவத்தை கொடுத்தது. பத்ரியின் வெற்றிக்கு பிறகு தமிழில் நிறைய திரைப்படங்கள் கிக் பாக்ஸிங்கை மையமாக வைத்து எடுக்கப்பட்டது.

இந்தப் பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கும் திரைப்படம் குருவி. இந்த திரைப்படத்தில் விஜய் கார் பந்தய வீரராக நடித்திருப்பார். எனினும் படத்தின் கதை முற்றிலும் வேறாக இருந்தாலும். இதில் விஜய் கார் பந்தய வீரராக அறிமுகமாகி இருப்பார். எனினும் இந்த கார் பந்தயத்தில் நடிகர் விஜய் கார் ஓட்டும் காட்சி அப்போதே பெருமளவு விமர்சிக்கப்பட்டிருந்தது. இப்படி நடிகர் விஜய் தன்னுடைய திரைப்படங்களில் மற்ற விளையாட்டுப் போட்டிகளை ஊக்குவிக்கும் விதமாக நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, August 22, 2024, 15:34 [IST]
Other articles published on Aug 22, 2024
English summary
TVK Vijay - List of 5 Movies Where Actor Vijay featured as sports Athlete VIJAY - விளையாட்டு வீரராக தளபதி விஜய் நடித்த படங்கள்.. நீங்க எதிர்பார்க்காத படங்களும் இதில் இருக்கு!
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+