நாளை முதல் சூப்பர் 8 ஆட்டங்கள்- 7ம் தேதி இந்தியா மோதல்

சூப்பர் எட்டு சுற்றுக்கு முதலில் தகுதி பெற்ற அணி இந்தியாதான். இந்தியா சூப்பர் எட்டு சுற்றில், ஆஸ்திரேலியா, இலங்கை, மேற்கு இந்தியத் தீவுகள் ஆகிய மூன்று வலிமையான அணிகளுடன் மோத வேண்டியுள்ளது.
கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் 7ம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் இந்தியா களம் இறங்குகிறது.
தனது சுற்றுப் போட்டிகளில் ஆப்கானிஸ்தானையும், தென் ஆப்பிரிக்காவையும் இந்தியா எளிதில் தோற்கடித்து சூப்பர் எட்டுக்கு முன்னேறியுள்ளது. ஆனால் சூப்பர் எட்டில் கடும் போட்டியை சந்தித்தாக வேண்டிய நிலையில் இந்தியா உள்ளது.
இன்னொரு பிரிவில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகள் மோதவுள்ளன. இன்றைய ஆஸ்திரேலியா- வங்கதேசப் போட்டிக்குப் பின்னர் சூப்பர் எட்டுக்கு முன்னேறும் நான்காவது அணி பாகிஸ்தானா அல்லது வங்கதேசமா என்பது தெரிய வரும்.
சூப்பர் எட்டு போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி பார்படோஸ் வந்து சேர்ந்துள்ளது. காயமடைந்துள்ள கம்பீர் மற்றும் ரெய்னா, யுவராஜ்சிங் உள்ளிட்ட வீரர்கள் நேற்று பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டனர்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:37 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications