Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பெங்காலிடம் உதைபட்ட உ.பி.,

லக்னோ: புரோ கபடி லீக் சீசன் 5ல், பி மண்டலத்தில் உள்ள உ.பி. யோத்தா அணி, புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருந்தாலும்,தொடர்ந்து, நான்காவது போட்டியில் தோல்வியடைந்தது. நேற்று இரவு நடந்த ஆட்டத்தில், பி பிரிவில் உள்ள பெங்கால் வாரியர்ஸ் அணி 32-31 என்ற கணக்கில் வென்றது.

புரோ கபடி லீக் 5வது சீசன் போட்டிகள் தற்போது நடந்து வருகின்றன. இதில், பெங்கால் வாரியர்ஸ் அணியும், உ.பி. யோத்தா அணியும் மோதின.

another defeat for U.P.


துவக்கம் முதலே இரு அணிகளும் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டன. அதிக ரிஸ்க் எடுக்காமல், புள்ளிகளை குவிப்பதில் இரு அணிகளும் ஆர்வம் காட்டன. இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகள் எடுத்து சமபலத்தில் இருந்து வந்தன. முதல் பாதி முடிவதற்கு சில நிமிடங்களே இருந்த நிலையில், பெங்கால் வாரியர்ஸ் அணி, ஆக்ரோஷமான ஆட்டத்தில் ஈடுபட்டது. அதன்படி முதல் பாதியில், 19-14 என்று முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில், உ..பி., யோத்தா அணி தீவிர எதிர்தாக்குதலில் ஈடுபட்டது. ஆட்டம் முடிய, ஏழு நிமிடங்களே இருந்த நிலையில், 25-25 என்று உ.பி. யோத்தா அணி சமநிலையை உருவாக்கியது. கடைசி வரை, இரு அணிகளும் சமபலத்தில் மோதின. வெற்றி பெறப் போவது பாகுபலியா, பல்லாள தேவனா என்று மிகவும் ஆக்ரோஷமாக நடந்த இப்போட்டியில், கடைசியில், பெங்கால் வாரியர்ஸ் அணி 32-31 என, ஒரு புள்ளியில் வென்றது.

உ.பி., யோத்தா அணி, 9 போட்டிகளில், 3ல் வெற்றி, 5ல் தோல்வி, ஒரு டையுடன், 22 புள்ளிகளைப் பெற்று, புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

பெங்கால் வாரியர்ஸ், 6 போட்டிகளில், 3ல் வெற்றி, 2ல் தோல்வி, ஒரு டிராவுடன், 19 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

மற்றொரு ஆட்டத்தில், குஜராத் பார்ச்சூன்ஜயன்ட்ஸ் அணி 35-21 என்ற கணக்கில் புனேரி பல்தான் அணியை வென்றது



Story first published: Wednesday, August 23, 2017, 17:48 [IST]
Other articles published on Aug 23, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+