Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஹல்க் ஹோகன் வண்டவாளத்தை போட்டு உடைத்த அண்டர்டேக்கர்.. வெளியான 29 வருட ரகசியம்!

நியூயார்க் : WWE நிகழ்ச்சிகளில் 1990களில் கலக்கி வந்த வீரர்கள் ஹல்க் ஹோகன் மற்றும் அண்டர்டேக்கர்.

Recommended Video

Undertaker revealed secret about Hulk Hogan’s neck injury

ஹல்க் ஹோகன் 90களின் இறுதியிலேயே ரெஸ்லிங் போட்டிகளில் பங்கேற்பதை குறைத்துக் கொண்டார்.

அண்டர்டேக்கர் இன்னும் ரெஸ்லிங் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். அவர் ஓய்வு பெற்று விட்டதாகக் கூட சில தகவல்கள் வலம் வருகின்றன.

உச்சத்தில் ஹல்க் ஹோகன்

உச்சத்தில் ஹல்க் ஹோகன்

1991இல் ஹல்க் ஹோகன் ரெஸ்லிங் உலகின் உச்சத்தில் இருந்தார். WWEஇல் அவருக்கு என தனி ரசிகர் கூட்டம் இருந்தது. அப்போது அவர் சாம்பியனாக இருந்தார். அண்டர்டேக்கருக்கும், ஹல்க் ஹோகனுக்கும் இடையே சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.

அண்டர்டேக்கர் வெற்றி

அண்டர்டேக்கர் வெற்றி

அந்தப் போட்டியில் அண்டர்டேக்கர் வெற்றி பெற்றார். அதுதான் அவரின் முதல் சாம்பியன்ஷிப் வெற்றி. அந்தப் போட்டியில் ஹல்க் ஹோகனுக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. அது பற்றிய உண்மையை தான் அண்டர்டேக்கர் இப்போது ஒரு பேட்டியில் போட்டு உடைத்துள்ளார்.

காயம்

காயம்

அந்தப் போட்டியில் அண்டர்டேக்கர் டோம்ப்ஸ்டோன் பைல் டிரைவர் என்ற தன் நகர்வின் மூலம் ஹல்க் ஹோகனை தலை கீழாக திருப்பி தாக்கினார். அப்போது காயம் ஏற்பட்டதாக ஹல்க் ஹோகன் கூறி இருந்தார். அதன் பின் அண்டர்டேக்கர் அந்த போட்டியின் வீடியோ காட்சிகளை பார்த்துள்ளார்.

காயம் ஏற்படவில்லை

காயம் ஏற்படவில்லை

அந்த காட்சிகளில் ஹல்க் ஹோகன் தலை தரையில் மோதவில்லை. அப்படி என்றால் கழுத்தில் காயம் ஏற்பட வாய்ப்பே இல்லை. அதை உறுதி செய்து கொண்ட அண்டர்டேக்கர், ஹல்க் ஹோகனிடம் காயம் ஏற்படவில்லையே என கூறி உள்ளார்.

பொய் சொன்ன ஹல்க் ஹோகன்

பொய் சொன்ன ஹல்க் ஹோகன்

அதற்கு ஹல்க் ஹோகன், தன் கழுத்தில் காயம் ஏற்பட்டது என மீண்டும் உறுதியாக கூறி உள்ளார். இந்த நிகழ்ச்சி பற்றி பேட்டியில் குறிப்பிட்ட அண்டர்டேக்கர், அப்போதுதான் தனக்கு ஹல்க் ஹோகன் பற்றி தெரிய வந்தது என்று கூறி உள்ளார்.

அவர் இப்படித் தான்

அவர் இப்படித் தான்

ஹல்க் ஹோகன் பொய் சொன்னார் எனத் தெரிந்தும், அவருடன் தான் தொடர்ந்து பேசி வந்ததாக கூறினார். அதற்கு காரணம், அவர் இப்படித் தான் என தனக்கு தெரிந்து விட்டது. அது தான் முக்கியம் என தான் கருதியாக கூறினார் அண்டர்டேக்கர்.

29 ஆண்டுகளுக்கு முந்தைய சம்பவம்

29 ஆண்டுகளுக்கு முந்தைய சம்பவம்

பெரிய ஜாம்பவான் என பில்டப் கொடுக்கப்படும் ஹல்க் ஹோகனின் வண்டவாளத்தை வெளியே போட்டு உடைத்துள்ளார் அண்டர்டேக்கர். அதுவும் சுமார் 29 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் பற்றி இப்போது பேசி உள்ளார். அண்டர்டேக்கர் இப்படி பழைய கதைகளை பேசத் துவங்கியதை வைத்தும் அவர் ஓய்வு பெற்றுவிட்டார் என சிலர் கூறி வருகிறார்கள்.

Story first published: Saturday, May 30, 2020, 21:08 [IST]
Other articles published on May 30, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+