Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிரவீன் குமார் திடீர் காயம்-சிகிச்சைக்காக இங்கிலாந்து விரைகிறார்

Praveen Kumar
டெல்லி: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வேகமாக நெருங்கி வரும் நிலையில் வேகப் பந்து வீச்சாளர் பிரவீன் காயமடைந்துள்ளார். இதையடுத்து சிகிச்சைக்காக அவர் இங்கிலாந்து விரைகிறார்.

தென் ஆப்பிரிக்கத் தொடரின்போது அவருக்கு காயம் ஏற்பட்டது. அதிலிருந்து அவர் இன்னும் குணமடையாததால், அவரால் உலகக் கோப்பைப் போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பிப்ரவரி 19ம்தேதி உலகக் கோப்பைப் போட்டி தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

காயத்தை சரி செய்வதற்காக பிரவீன் குமார் நாளை இங்கிலாந்து செல்கிறார். அங்கு அவருக்கு அவசர சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது. இருப்பினும் அவர் போட்டிக்கு முழுத் தகுதியை அடைவது சந்தேகம்தான் என்று கூறப்படுகிறது.

தென் ஆப்பிரிக்கத் தொடரை முடித்துக் கொண்டு திரும்பிய பின்னர் பெங்களூர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை எடுத்து பயிற்சியில் ஈடுபட்டிருந்தார் பிரவீன் குமார். இருப்பினும் அவரது காயம் முழுமையாக குணமடையவில்லை.

பிரவீன் குமார் முழுத் தகுதியைப் பெறாவிட்டால் அவருக்குப் பதில் ஸ்ரீசாந்த் சேர்க்கப்படக் கூடும் என்று தகவல்கள் கூறுகின்றன. அவர் உலகக் கோப்பைப் போட்டிக்கான அணியில் சேர்க்கப்படாததால் ஸ்ரீசாந்த் ரசிகர்கள் மட்டுமல்லாமல் கிரிக்கெட் ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்திருந்தனர். இப்போது பிரவீன் குமார் ரூபத்தில் ஸ்ரீசாந்த்துக்கு புதிய வாய்ப்பு உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:44 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+