Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒலிம்பிக்கில் அமெரிக்காவின் பெல்ப்ஸ் 21-வது தங்கம் வென்று அசத்தல்

ரியோ: ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் அமெரிக்காவின் பெல்ப்ஸ் 21-வது தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

2004ம் ஆண்டு ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் 6 தங்கமும் பெய்ஜிங் ஒலிம்பிக்கில் 8 தங்கமும் லண்டன் ஒலிம்பிக்கில் 4 தங்கமும் பெல்ப்ஸ் வென்றிருந்தார். லண்டன் ஒலிம்பிக் போட்டி வரை பெல்ப்சின் கணக்கில் 18 தங்கம் உள்பட 22 பதக்கங்கள் இருந்தன.

Unstoppable Michael Phelps secures 21 gold medals

இதனைத் தொடர்ந்து ஓய்வு பெறுவதாக பெல்ப்ஸ் அறிவித்தார். ஆனால் 2013-ம் ஆண்டு தொடர் நீச்சலில் பிரான்சிடம் அமெரிக்கா தோல்வியைத் தழுவ மீண்டும் களத்துக்கு வந்தார் பெல்ப்ஸ்.

நடப்பு ரியோ ஒலிம்பிக்ஸில் 4x100 மீட்டர் பிரீஸ்டைல் தொடர் நீச்சலில் பெல்ப்ஸ் இடம்பெற்றிருந்ந்த அமெரிக்கக் குழு 3 : 9.92 விநாடிகளில் கடந்து தங்கத்தை தட்டி சென்றது. இதனால் பெல்ப்ஸின் தங்க பதக்க எண்ணிக்கை 19-ஆக உயர்ந்தது.

இதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற 200 மீ., பட்டர்பிளை மற்றும் 4X200மீ ப்ரீஸ்டைல் நீச்சல் போட்டிகளில் அமெரிக்கா குழு அடுத்தடுத்து தங்கம் வென்றது. இதன் மூலம் பெல்ப்ஸின் தங்க பதக்க எண்ணிக்கை 21-ஆனது. ஒலிம்பிக்கில் மொத்தம் அவர் 25 பதக்கங்களை அள்ளி இருக்கிறார்.

Story first published: Wednesday, August 10, 2016, 10:30 [IST]
Other articles published on Aug 10, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+