For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சீனாவுக்கு இடியாக இறங்கியது அமெரிக்காவின் முடிவு- ஒலிம்பிக் போட்டிகளுக்கு சிக்கல்..

வாசிங்டன்: சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் அரசாங்கம் மனித உரிமைகளை
மீறுவதாக புகார்கள் குவிந்தன.

Recommended Video

Chinaவுக்கு America வைத்த செக் ! Olympics 2022க்கு சிக்கல் | OneIndia Tamil

மேலும் அரசுக்கு எதிராக யாராவது பேசினால் சிறை, சமூக வலைத்தளங்களுக்கு தடை என பல்வேறு அக்கப்போரை சீனா செய்து வந்தது.

சீனாவில் வாழும் இஸ்லாமியர்களை இன அழிப்பு செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த செயல்களுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தாலும், சீனா அதனை கண்டுகொள்ளாமல் இருந்து வந்தது

பெங் சூயி

பெங் சூயி

இந்த நிலையில், சீனாவின் முன்னாள் துணை அதிபர் மீது பாலியல் புகார் கூறிய டென்னிஸ் வீராங்கனை பெங் சூயி மாயமான விவகாரம் உலகம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. உலக நாடுகளின் பல அழுத்தத்திற்கு பிறகு , பெங் சூயிவின் வீடியோவை சீனா வெளியிட்டது.எனினும் சீனா பெங் சூயியை பினைக் கைதி போல் நடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

தடை

தடை

சீனாவின் இந்த செயலை அடுத்து, அங்கு நடைபெறவிருந்த சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டியை மகளிர் டென்னிஸ் சம்மேளனம் ரத்து செய்தது. இந்த நிலையில், சீனாவில் அடுத்த ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவிருந்தது. அதற்கும் சிக்கல் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

அமெரிக்கா முடிவு

அமெரிக்கா முடிவு

அமெரிக்கா முடிவு அதன் படி, பீய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு அமெரிக்க அரசு அதிகாரிகளை வீரர்களுடன் அனுப்பபோவது இல்லை என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. எனினும், இந்த தொடரில் வீரர்கள் பங்கேற்க எவ்வித தடையும் இல்லை என்றும் வீரர்களுக்கு அரசு உதவிகள் மேற்கொள்ளும் என்றும், அமெரிக்கா தெரிவித்துள்ளது. வீரர்கள் பாதிக்க கூடாது என்பதற்காக தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு விளக்கம் அளித்துள்ளது.

ஆதரவு

ஆதரவு

பைடன் அரசின் முடிவுக்கு பல்வேறு தரப்பும் ஆதரவு தெரிவித்துள்ளன. மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் சீனாவுக்கு இது சரியான பாடமாக அமையும் என்று மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு சிலர், மனித உரிமைகளை மீறும் சீனா ஒலிம்பிக் போட்டியை நடத்தும் தகுதியை இழந்துவிட்டதால், அமெரிக்கா முழுமையாக பீய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் தொடரிலிருந்து விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

சீனா எதிர்ப்பு

சீனா எதிர்ப்பு

இதனிடையே, விளையாட்டை அமெரிக்கா அரசியலாக்குவதாக சீனா குற்றஞ்சாட்டியுள்ளது. அமெரிக்க அதிகாரிகள் குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு வராமல் இருப்பதால் தங்களுக்கு எவ்வித நஷ்டமும்இல்லை என்று சீனா தெரிவித்துள்ளது. இதற்கு தாங்கள் தரும் எதிர்வினையை சந்தித்து ஆக வேண்டும் என்று சீனா தெரிவித்துள்ளது. ஏற்கனவே 1980ஆம் ஆண்டு மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியிலிருந்து அமெரிக்கா விலகியிருந்த நிலையில் தற்போது அதிகாரிகளை மட்டும் அனுப்பபோவதில்லை என்று முடிவு எடுத்துள்ளது

Story first published: Tuesday, December 7, 2021, 20:25 [IST]
Other articles published on Dec 7, 2021
English summary
US announces diplomatic boycott to 2022 Beijing OlympicsUS announces diplomatic boycott to 2022 Beijing Olympics. US Said they Wont send any official delegates to Beijing. But There is no restriction on Players to Participate
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X